தெற்கு பிலிப்பைன்ஸ் தீவில், 6.9 ரிக்டர் அளவுகோலில், நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்டானோ என்ற பகுதியை மையமாக கொண்டு, பூகம்பம் தாக்கியுள்ளது. இதனால்,
இந்தோனேஷியா,
(தொடர்ச்சி கீழே...)
பாலோ உள்ளிட்ட பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை பிறப்பித்துள்ளது, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்.
இதுவரை, பூகம்பத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்த பூகம்பம் 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதன் தாக்கம் 300
கி.மீ சுற்றளவு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுனாமி காரணமாக 0.3 மீட்டர் வரையில், அலை எழக்கூடிய வாய்ப்பு உள்ளது.
பூகம்பம் தாக்கியதும், அது 7.2 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக கூறப்பட்டது.
பின்னர், அது 6.9 ரிக்டர் என அறிவிக்கப்பட்டது.
இது சிறு அளவிலான சுனாமி எச்சரிக்கைதான் என்பதால், மக்கள் பீதியடையத்
தேவையில்லை.
No comments:
Post a Comment