வங்க கடலில் உருவாகி இருக்கும் புயல் காரணமாக, இன்றும் நாளையும் பலத்த
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலோர
மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
புரட்டி போட்ட கஜாவுக்கு பிறகு அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்துக்கு வர
இருக்கின்றன என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் கஜா அளவு தீவிரமான புயல் இருக்காது என்றும் இந்த புயல்கள் காரணமாக
தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி,
தற்போது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி
உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
தாழ்வு மண்டலம்
இதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சொன்னதாவது:
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத தாழ்வு மண்டலம்
வலுவடைந்தது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
புயலாக வலுப்பெறும்
இது நேற்று சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவிலும்,
மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 1,090 கி.மீ., தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும்
வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று அது புயலாக வலுப்பெறும்.
கரையை கடக்கும்
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இந்தப் புயல் வருகிற 17-ம் தேதி பிற்பகல்தான் கரையை கடக்கும். ஆந்திர
கடற்கரை பகுதியான ஓங்கோலுக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே இந்த புயல்
கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம்
இதன் காரணமாக, வடதமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையை
எதிர்பார்க்கலாம். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடல் கொந்தளிப்பு
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன்
காணப்படும். அதனால் இந்த பகுதிகளுக்கு சனி, ஞாயிறு இரு தினங்களில்
மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தி இருந்தார்.
கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி
உள்ளிட்ட மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை கூண்டு
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக எண்ணூர், சென்னை,
கடலூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மற்றும்
பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார். பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போ...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம் நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள். நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை ந...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் ...
-
ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது காத...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
No comments:
Post a Comment