குழந்தைகள் பேசினாலே அழகுதான். அதிலும் புத்திச்சாலித்தனமாக பேசினால்
கொள்ளை அழகு.
இதுபோன்ற குழந்தைகள் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மித்திகா என்ற குழந்தை ஏதோ தவறு
செய்துவிட்டதற்கு அவரது அம்மா லேசாக அடித்தார்.
(தொடர்ச்சி கீழே...)
அதற்கு அந்த குழந்தையோ தப்பு செஞ்சா அதென்ன அடிக்கிறது... அடிக்காமல் வாயால் குணமா சொல்லோனும் என கூறியது வைரலானது. இதை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்களும் பிஸியாக இருந்தனர். இதை அரசியல்வாதிகளுக்கு பக்காவாக மீம்ஸ் கிரியேட் செய்தனர்.
சங்கத்துல
அதுபோல் இன்னொரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசும் ஸ்டைலை பார்த்தால் மதுரை பக்கம் என தெரிகிறது. அந்த வீடியோவில் அந்த சிறுவனிடம் இளைஞர் அணி சங்கத்துல சேர்ந்துட்டே சரியா என்று யாரோ கேட்கின்றனர்.
2000 ரூபாய்
அதற்கு அந்த சிறுவனோ ஹூம் என்கிறார். போய் உங்கம்மாகிட்ட ரூ. 2000 வாங்கிவிட்டு வா என்கிறார். ம்ம் என்று சொல்லிவிட்டு அந்த சிறுவன் செல்கிறான்.
சாப்பாடு
அதற்கு அந்த நபரோ போய்விட்டு வருவியா இல்லையா என கேட்க சாப்பிட்டு வரேன் என்கிறான் சிறுவன். சங்கம் முக்கியமா இல்லை சாப்பாடு முக்கியமா என அவர் கேட்க அதற்கு அந்த சிறுவன் சாப்பாடு முக்கியம் என்கிறார்.
அழுதுகொண்டே
சங்கத்தில உறுப்பினர் நீ, சாப்பாடு முக்கியம்ங்கற என அந்த நபர் கேட்க அதற்கு சிறுவனோ சாப்பாடுதான்... அப்போ எனக்கு பசிக்கும் இல்ல நான் சாப்பிட கூடாதா? என அழுது கொண்டே கேட்கிறான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment