காலையில் தெருக்களில் பிச்சையெடுப்பது போல் நடித்து இரவு நேரங்களில்
வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை,
சேலையூர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளின் பூட்டை
உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன.
(தொடர்ச்சி கீழே...)
இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து ஆதம்பாக்கம் காவல் துறை சார்பில் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து ஆதம்பாக்கம் காவல் துறை சார்பில் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூர் கடற்கரையில் பிச்சைக்காரர்
வேடத்தில் பகல் முழுவதும் தூங்கிவிட்டு விட்டு பின்னர் ரயில் ஏறி சென்று
சில பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணிப்பாராம்.
அதில் எந்த வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அந்த வீட்டிற்குள் இறங்கி
திருடிவிட்டு தப்பிவிடுவது அனீஸின் பணியாக இருந்தது. இதையடுத்து போலீஸார்
அவரை கைது செய்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
No comments:
Post a Comment