போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள பிங்க் திரைப்படம்
ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு ரசிகர்கள்
பட்டாளம் மிக அதிகம். ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டாலும், சமூக
வலைதளங்களில் அவரது ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
மாஸ் ஹீரோவாக இருந்தாலும், குணச்சித்திர வேடங்களில் நடிப்பதிலும்
அஜித்துக்கு விருப்பம் அதிகம். அதேபோல நல்லவன் இமேஜ் கொண்ட பாத்திரங்கள்
தான் என்றில்லாமல், மங்காத்தா போன்ற எதிர்மறையான கதாபாத்திரங்களிலும் அவர்
நடிக்க தயங்கியதில்லை.
எதிர்மறையான மங்காத்தா
மங்காத்தாவை பொறுத்தவரைஇ அது ஒரு டிரெண்ட் செட்டராகவே அமைந்தது.
ரசிகர்களிடம் தன்னை நல்லவனாக தான் காட்டிக்கொள்ள வேண்டும் என்று தான்
பெரும்பாலமான ஹீரோக்கள் நினைப்பார்கள். ஆனால் தன்னை எப்படி
காட்டிக்கொண்டாலும், ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என அஜித் நிரூபித்த படம்
தான் மங்காத்தா.
சிறுத்தை சிவா படங்கள்
அந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம்,
வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களுமே மாஸ் ஹீரோ படங்கள் தாம். குறிப்பாக
இந்த படங்களில் அண்ணன் தம்பி, அண்ணன் தங்கச்சி, கணவன் மனைவி என குடும்ப
செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும்.
விரைவில் விஸ்வாசம்
இவர்களது கூட்டணியில் நான்காவதாக வரவுள்ள படம் தான் விஸ்வாசம். இதில்
தூக்குதுரை கதாபாத்திரத்தில் வரும் அஜித்,கிராமத்து ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படமும் குடும்ப செண்டிமெண்ட் படம் தான்.
பிங்க் ரீமேக்
ஆனால் அவரது அடுத்தப்படம் இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தியில்
அபிதாப் பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படித்தின் ரீமேக் தான் இது. இந்த
படத்தை எச்.வினோத் இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனி கவுர்
தயாரிக்கிறார்.
அபிதாப் ரோலில் அஜித்
இந்த படத்தில் அபிதாப்பின் ரோலில் அஜித் நடிக்கிறார். அது ஒரு கெஸ்ட் ரோல்
என்பதால், படத்தில் அஜித் தனது ரசிகர்கள் விரும்பும் காட்சிகளை இடம்பெற
செய்வாரா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால், இயக்குனரின் வேலைகளில்
அஜித் அவ்வளவாக தலையிடமாட்டார். அதுவும் எச்.வினோத் போன்ற ஒரு இயக்குனரின்
வேலையில் அவர் தலையிடவே மாட்டார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நன்றாக
தெரியும்.
அஜித்துக்கு செட்டாகுமா?
பிங்க் படத்தை பொறுத்த வரை அமிதாப் பச்சன் பாலியல் பலாத்காரத்தால்
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்காக வாதாடுவார். கிட்டத்தட்ட தமிழில் பல
ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரியங்கா படத்தில் ரேவதிக்காக பிரபு
வாதாடுவதைப் போல. இந்த ரோலில் நடிப்பதில் அஜித்துக்கு எந்த பிரச்சினையும்
இருக்காது. ஆனால் அவரது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களாக என்பது
கேள்விக்குறியே.
No comments:
Post a Comment