வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆமையை மீண்டும் கடலிலேயே விட்ட இந்த மனசுதாங்க.. கடவுள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 15, 2018

ஆமையை மீண்டும் கடலிலேயே விட்ட இந்த மனசுதாங்க.. கடவுள்!



தங்கம் போல மனசு உடையவர்கள் மீனவர்கள்! கடலுக்கு அடியில் ஆமைகள் படும் பாடு சொல்லி மாளாது. கடல்நீர் மாசடைந்து வருவதால் ஆமைகளின் உயிர்கள் சிதைந்து வருவது ஒரு வித மறைமுகமான அழிவு. 


பல்வேறு காரணங்களுக்காக ஆமைகளை மனிதர்கள் பிடித்து கொன்று உபயோகிப்பது தெரிந்தே நடக்கும் அழிவு. குஞ்சுகளாக இருக்கும் போதே, பிற கடல் வாழ் உயிரினங்களுக்கு இரையாகி விடுவது தெரியாமல் நடக்கும் அழிவு. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இவ்வளவு அச்சுறுத்தல்களிடையேதான் ஆமை வாழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்கப் போனபோது தூண்டிலில் சிக்கிய ஆமையை விடுவித்து அசத்தியுள்ளனர்.

தூண்டில் 
மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் படகில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது மீனை பிடிக்க தூண்டிலை போட்டார். என்னவோ வசமாக மாட்டி கொண்டது என்று துள்ளி குதித்தனர் அனைவரும். தூண்டிலை இழுக்க முயன்றபோது அது கனமாகி கொண்டே வந்தது.


ஐயோ பாவம் 
இன்று சரியான வேட்டை என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் கிட்ட வர வரதான் தெரிந்தது அது ஒரு ஆமை என்று. இதனால் ஏமாற்றம் ஒருபக்கம் இருந்தாலும், எல்லார் முகத்திலும் இருந்தது "ஐயோ பாவம்"தான்.

நடுங்கிய ஆமை  
சிக்கிய ஆமையை கண்டதும் என்ன செய்வதென்று ஒரு நிமிடம் விழித்தனர் மீனவர்கள். ஆனால் அதைவிட நடுங்கியது அந்த ஆமை. உடனடியாக மீனவர்கள் அந்த ஆமையை அப்படியே தூண்டிலில் இருந்து மீட்டு மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டனர்.


துள்ளி குதித்தது
 விடுவித்தபின்னர், அமைதி காத்த ஆமை துள்ளி குதித்து கொண்டு பாய்ந்து சென்றது. ஆமை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக ஓடியதோ அதே அளவுக்கு சந்தோஷப்பட்டார்கள் மீனவர்களும். இந்த காட்சியை படகிலிருந்த மீனவர் ஒருவரே வீடியோவாக எடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தங்கமான மனசு
மீனவர்களாகவே இருந்தாலும் கையில் அகப்பட்ட ஆமையை அவர்கள் எடுத்து வந்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதனை மீண்டும் கடலுக்குள்ளேயே வாழ விட தோன்றும் மீனவரின் மனசை என்னவென்று சொல்வது!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment