வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அதிதி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 24, 2018

படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அதிதி



பாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார். 


பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர்.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்நிலையில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி துணிச்சலாக பேசியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பேசியதாவது,

சினிமா 
என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அந்த வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. (பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது). அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

நம்பிக்கை 
எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. இருப்பினும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.

சம்பவம் 
அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள்.

அதிதி  
தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் தான் செய்ய வேண்டும். மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிதி. பாலியல் தொல்லை குறித்து அதிதி பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment