வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புற்றுநோய் சிகிச்சை பெற்று கொண்டே டான்ஸில் கலக்கும் 5 வயது சிறுவன்..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 19, 2018

புற்றுநோய் சிகிச்சை பெற்று கொண்டே டான்ஸில் கலக்கும் 5 வயது சிறுவன்..



அமெரிக்காவில் 5 வயது சிறுவன் ஒருவன் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனமாடியபடியே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 

 
அமெரிக்காவின் சீட்டல் நகரைச் சேர்ந்தவர் சாலமன். 5 வயது சிறுவனான அவருக்கு செல்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக புற்று நோய் ஏற்பட்டுள்ளது. உலகில் அரிதான புற்றுநோயான இது, இதுவரை 200 பேரிடம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
10 வயது முதல் 30 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு வரக்கூடிய இந்த நோய், 5 வயது சிறுவனான சாலமனுக்கு வந்துள்ளது. அதனை கண்டு கலங்கிய அவரது பெற்றோர் சாலமனை அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையில் சிறப்பு வாய்ந்த மருத்துவக்குழுவினர் சிறுவன் சாலமனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலை ரணப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சைகள் ஒரு புறம் இருக்க, கடுமையான வலியிலும் சிறுவன் சாலமன் பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனமாடுகிறார்.


அது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கதிரியக்கம் மற்றும் கீமோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ள நிலையில் சிறுவன் சாலமனின் இந்த செயல், அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், மனஉறுதியையும் அளிக்கும் என்று அவரது தாயார் லெனி கூறியுள்ளார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வரும் தமது மகன் சாலமன், மைக்கேல் ஜாக்சனின் இசை, நடனத்தால் உற்சாகத்துடன் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். எது எப்படியோ.. இசையானது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி தெளிவான சிந்தனையை அளிப்பதோடு, தமக்கான நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் என்பது தான் நாம் தெரிந்து கொள்ளும் சேதி.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment