வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாஜக தோல்வியை இப்படி கொண்டாடுகிறார்களே மக்கள்.. ஏன்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 11, 2018

பாஜக தோல்வியை இப்படி கொண்டாடுகிறார்களே மக்கள்.. ஏன்?



5 மாநில தேர்தல் முடிவை வைத்து நெட்டிசன்கள் பாஜகவை விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள். 5 மாநில தேர்தலின் முடிவுகள் முழுசும் வெளிவருவதற்குள், ட்விட்டரில் மக்கள் அலப்பறையில் இறங்கி விட்டார்கள். 
 
முன்பு "கோ பேக் மோடி"க்கு பதிவிட்டது போலவே, இப்போதும் மோடியின் போட்டோவை போட்டு கமெண்ட்டுகளை விதவிதமாக தெறிக்க விட்டு வருகிறார்கள். தமிழக மக்களுக்கு மோடியின்மேல் இவ்வளவு கோபம் இருக்க என்ன காரணம்? நாட்டு மக்களுக்கு அவர் தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றாமல் உள்ளது பொதுவான காரணம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மக்கள் சந்தோஷம் 
ஆனால் தமிழக நலன்களை மத்திய ஆட்சி தொடர்ந்து புறக்கணிக்க ஆரம்பித்தபோதே மோடிமேல் நம் மக்களுக்கு ஆத்திரமும், கோபமும், எதிர்ப்பும் அதிகமானது. அதன்விளைவுதான், 5 மாநிலங்களில் தேர்தல் முடிவு வெளியிட்டதற்கு தமிழகத்தில் அப்படிக் கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அப்படி ஒரு சந்தோஷத்தை மக்கள் மத்தியில் பார்க்க முடிகிறது.


தலையில் துண்டு
ஒரு மீமில், மோடி தலையில் துண்டை போட்டு கப்பல் கவிழ்ந்த மாதிரி இருக்கிறார். மற்றொரு போட்டோவில் ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொண்டு பார்க்கிறார் மோடி. மற்றொன்றில், அமித்ஷாவும், மோடியும் எப்படி தேர்தலில் தோற்றோம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் போட்டோக்களை பதிவிட்டதுடன், அதன்கீழ் கமெண்ட்களையும் போட்டு நெட்டிசன்கள் இணையத்தையே சூடாக்கி விட்டுள்ளனர்.

மீண்டும் தோற்க வாழ்த்துகள் 
மீதம் இருக்க எல்லா எலக்‌ஷன்லயும் வெற்றிகரமான தோல்வி அடைய வாழ்த்துகள் சொல்றேன்ங்க.


ராகுல் காந்தி  
பாஜகவை விமர்சிக்கும் அளவிற்கு அவர்கள் படுதோல்வி அடையவில்லை. அதே சமயம் @RahulGandhi அவர்கள் @INCIndia கட்சியின் தலைவரான பின்னர் அவர் ஈட்டிய மிகப்பெரிய வெற்றி இது. இந்த வெற்றியின் மூலம் கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு #Rahulgandhi மீது நம்பிக்கை வருமா ?என்பது தான் கேள்வி.

எங்க வண்டியைக் காணோம் 
தமிழக பாஜக தலைமை அலுவலகம் யாருமே இல்லாமல் ஈ அடித்துகொண்டிருக்கிறது. அந்த போட்டோவை போட்டு, "எங்கடா இங்க இருந்த வண்டிய காணோம்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment