வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 29, 2018

21ம் நாள் முற்றத்தில் புதைக்க வேண்டும்.. 18 நாட்கள் தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன் கைது

இறந்த தாயின் உடலுடன் 18 நாட்கள் வசித்த மகனை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். 


 கொல்கத்தா சிஐடி அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், 'சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் மைத்ரேய பட்டாச்சார்யா அவரது தாயாரின் உடலை யாருக்கும் தெரியாமல் புதைக்க தனது உதவியைக் கேட்பதாக’ புகார் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மைத்ரேய பட்டாச்சார்யாவைக் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த அவரது தாயின் உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். 
  (தொடர்ச்சி கீழே...)

 இதையும் படிக்கலாமே !!!

இது தொடர்பாக 38 வயதான மைத்ரேயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது, மைத்ரேயாவும் அவரது அம்மாவும் வசித்து வந்த வீட்டில் தான் அவரது தந்தை கடந்த 2013ம் ஆண்டு தீவிபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவர் ஞாபகமாக அந்த வீட்டைப் புதுப்பிக்காமலேயே அவர்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 18 நாட்களுக்கு முன்னர் மைத்ரேயாவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால், மூடபழக்கவழக்கங்களில் அதிக நம்பிக்கை கொண்டவரான மைத்ரேயா, தாயின் உடலை 21 நாட்களுக்குப் பிறகே புதைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார். இதனால் வீட்டில் இருந்த அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்து விட்டு, தாயின் உடலுடன் அவர் 18 நாட்கள் அதே வீட்டில் இருந்துள்ளார். தன் வீட்டு முற்றத்திலேயே தாயின் உடலைப் புதைக்க வேண்டும் என விரும்பிய அவர், அதற்காக தனது நண்பரின் உதவியை நாடியபோது தான் போலீசில் சிக்கியுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தனது தாயும் இது போன்ற நம்பிக்கைகளில் அதிக ஆர்வமாக இருந்ததாகவும், எனவே அவரது விருப்பப்படியே தான் நடந்து கொள்ள திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment