இந்த ஆடுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? கண்ணில எதை பார்த்தாலும் மேய
ஆரம்பிச்சா... கடைசியில பிரியாணி ஆக வேண்டியதுதான்!
மத்திய செர்பியாவின் அரன்ஜெலோவாக் அருகே ரனிலோவிக் என்ற கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலம் வாங்க முடிவு செய்து, அதற்காக பணத்தை
சேர்க்க ஆரம்பித்தார்.
ரொம்பவும் வறுமையான குடும்பம் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க
தொடங்கினார். கடைசியில் 16 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார். (தொடர்ச்சி கீழே...)
வயலுக்கு சென்றார்கள்
இதைவைத்து 10 ஹெக்டர் நிலம் வாங்கவும் பிளான் குடும்பத்துடன் சேர்ந்து
பிளான் பண்ணினர். எனவே பணத்தை எடுத்து வந்து டேபிள் மேல் வைத்துவிட்டு,
குடும்பத்தில் எல்லோரும் வயலுக்கு சென்றுவிட்டார்கள். போகும்போது கதவை
மூடாமல் திறந்து விட்டு போய்விட்டிருக்கிறார்கள்.
பணம் இல்லை
கதவு திறந்து கிடக்கவும், அவர் வீட்டில் வளர்ந்து வந்த ஒரு ஆடு,
உள்ளுக்குள் நுழைந்து டேபிள் மேல் இருந்த பணத்தை தின்றுவிட்டது.
வயலிலிருந்து குடும்பத்தினர் வீடு திரும்பி வந்து பார்த்தால், பணத்தை
காணோம்.
ஜீரணிக்க முடியவில்லை
பிறகு டேபிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டின் வாயில், கொஞ்சம்
பிட்டு பிட்டாக பணத்துகள்கள் ஒட்டிக் கொண்டிருந்ததை பார்த்ததும் அப்படியே
அதிர்ச்சியாகி நின்றார்கள். 16 லட்சம் ரூபாயையும் ஆடு மென்று தின்றதை
அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.
சமைத்து சாப்பிட்டனர்
அதனால் ஆத்திரத்தில் அந்த ஆட்டை கொன்று குடும்பமே கோபத்துடன் சமைத்து
சாப்பிட்டது. ஆட்டுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் அவர்களால் உழைத்து
சம்பாதித்த அந்த 16 லட்ச ரூபாயை மறக்கவே முடியாமல் இன்னமும் சோகத்தில்
உள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
- காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
- ரூம் எடுத்தோம்.. ஜாலியாக இருந்தோம்.. விஷம் கலந்த ஜூஸ் கொடுத்தேன்.. செய்தியை முழுமையாக படிக்க இங்கு க...
- மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத...
- இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை ச...
- மூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில...
- ஏர்டெல் தளத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் போஸ்ட்பெயிட் சலுகையுடன் மாத தவணை முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சயம் இதற்கான முன்பதிவு ...
- "நீ என்ன சாதி" என்று கேட்டவர்களுக்கு சரியான செருப்படி பதிலை கொடுத்துள்ளார் நடிகை ரித்விகா!செய்திய...
- டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி செய்தியை முழுமையாக பட
No comments:
Post a Comment