புத்தாண்டு கொண்டாட்டங்களை வரும் 31ஆம் தேதி நள்ளிரவு 1 மணியுடன்
முடித்துக்கொள்ள வேண்டும் என நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு
சென்னை காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விடிய விடிய நீடிக்கும். சென்னை
மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் பீச், கிழக்கு கடற்கரை சாலை என புத்தாண்டு
கொண்டாட்டங்கள் களைகட்டும்.
(தொடர்ச்சி கீழே...)
இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில்
ஆண்டுதோறும் சென்னை காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு விடைபெற்று 2019 புத்தாண்டு பிறக்க உள்ளது.
போலீஸ் கட்டுப்பாடுகள்
சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதி நிர்வாகிகளுடன்
காவல்துறையினர் ஆலோசனை சென்னை ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும், வருகிற 31ஆம்
தேதி இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும்
என நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு
விதித்துள்ளது.
மேடை அமைக்க தடை
நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளில் நீச்சல் குளங்களை திறந்து வைக்க
கூடாது, அதன்மீது மேடை அமைக்கவும் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை
காவல்துறை விதித்துள்ளது.
பத்திரமாக அனுப்பி வைக்கனும்
மது மயக்கத்தில் இருப்பவர்களை விடுதி நிர்வாகம் பத்திரமாக அனுப்பி வைக்க
வேண்டும் என்றும் அனுப்பப்பட்டவர்கள் குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்க
வேண்டும் என்றும் சென்னை காவல்துறை தெவித்துள்ளது.
தண்ணீரை வெளியேற்றுக
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது
என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரை
முழுமையாக வெளியேற்றி நீச்சல் குளத்தை மூடி வைக்க வேண்டும் என்றும் சென்னை
காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மதுவிற்பனை செய்ய வேண்டும் என்றும்
காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment