எப்பவுமே இட்லி, தோசையா என்று அலுப்பும்சலிப்புமாகச் சொல்பவர்களுக்கான ஆபத்பாந்தன், அடைதான். அட... என்று அடையை அடைமொழி சொல்லி வரவேற்பதற்கு, மிகப்பெரிய ரசிகர்கூட்டமே இருக்கிறது.
காலையில் அடை என்றால் முதல் நாளில், இரவில் அடை என்றால் காலையில் இருந்தே, மனசும் நாக்கும் அடைகாக்கத் தொடங்கிவிடும், அடை சாப்பிடும் ஆசை அப்படி!
பருப்பு வகைகளின் கலவையுடன் செய்யப்படும் அடை, சுவைக்குச் சுவையுமாச்சு. சத்துக்குச்சத்தும் ஆச்சு.
இட்லி, தோசைக்கு காரச் சட்னியா, வெங்காயச்சட்னியா, தேங்காய்சட்னியா,
சாம்பாரா, பூண்டுச்சட்னியா, கொத்ஸா என்றெல்லாம் மண்டையைப்
பிய்த்துக்கொள்ளவேண்டும். தவிர, இட்லிதோசைக்கே அலுத்துக்கொள்கிறவர்கள், வேற
சட்னியே பண்ணத்தெரியாதா உனக்கு என்று அம்மா, மனைவி என அவர்களின்
சுயமரியாதையை வேறு உசுப்பிவிட்டுவிடுவார்கள். (தொடர்ச்சி கீழே...)
ஆனால், அடை ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்பது மாதிரி. அடைக்கு சைடு டிஷ் என்பதே தேவையில்லை. அப்படியே ஆனாலும் ஒரே சைடுடிஷ்... அவியல்தான். அவியலும் வேணாம். வெறுமனேவும் சாப்பிட வேணாம் என்பவர்களுக்கு, இட்லிமிளகாய்ப்பொடியோ அல்லது கொஞ்சம் வெல்லமோ செம ஸ்பெஷல். சாப்பிட்டுப் பார்த்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.
‘இப்படித்தான் எங்க பாட்டி..’ என்று நாற்பது வருட அடை ப்ளாஷ்பேக்குகளையும் ஒரு பேக்கேஜாகத் தந்துவிடுவார்கள்.
சரி... அடை செய்ய என்னென்ன தேவை?
ஆனால், அடை ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என்பது மாதிரி. அடைக்கு சைடு டிஷ் என்பதே தேவையில்லை. அப்படியே ஆனாலும் ஒரே சைடுடிஷ்... அவியல்தான். அவியலும் வேணாம். வெறுமனேவும் சாப்பிட வேணாம் என்பவர்களுக்கு, இட்லிமிளகாய்ப்பொடியோ அல்லது கொஞ்சம் வெல்லமோ செம ஸ்பெஷல். சாப்பிட்டுப் பார்த்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.
சரி... அடை செய்ய என்னென்ன தேவை?
தேவையான பொருட்கள்:
- அரைப்பதற்கு... புழுங்கல் அரிசி - 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
- பச்சரிசி - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது) உளுத்தம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
- துவரம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
- பாசிப் பயறு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
- கொள்ளு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது) கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
- வரமிளகாய் - 8, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், பூண்டு - 10 பல், இஞ்சி - 1 துண்டு, உப்பு - தேவையான அளவு தாளிப்பதற்கு...
- வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
- கசகசா - 1/2 டீஸ்பூன்
- தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
- எண்ணெய் - 3 டீஸ்பூன்
சரி... இப்போது அடை செய்வோமா?
செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புக்களை ஊற வைத்து நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்குக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் புரட்டியெடுத்து இறக்குங்கள்.
அடுத்து அதை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்குங்கள். இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், அடை ரெடி.
இதில் வட்டம்வட்டமாக கத்தரிக்காயை நறுக்கிச் சேர்த்து அடை செய்வதும் இன்னும் ஜோராக இருக்கும்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மக...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலிலில் உருவான குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்...
-
சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
காருக்குள் குழந்தையை மறைத்த பெண் காரை ரிப்பேர் பண்ண வந்த அந்த மெக்கானிக் கார் கதவை திறந்தவுடன் நாத்தம் குடலை புரட்டி கொண்டு வந்தத.
No comments:
Post a Comment