வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக் - New Java Bike like Bullet Style
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 18, 2018

புல்லட் சாயலில் புதிய ஜாவா பைக் - New Java Bike like Bullet Style



இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த  ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் மீண்டும் களமிறங்க இருக்கின்றன.  புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஜாவா மோட்டார்சைக்கிள்கள்  வர இருப்பதால், பெரும்  எதிர்பார்ப்பு நிலவுகிறது.




ஜாவா பிராண்டில் மொத்தம் 4 புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் வர இருக்கிறது. சட்டென பார்க்கும்போது, இது ராயல் என்பீல்டு புல்லட்டின் சாயலை பெற்றிருப்பதால், ஜாவா மோட்டார்சைக்கிள் மீதான  எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், இன்ஜின் அமைப்பு, மட்கார்டு உள்ளிட்டவை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளின் சாயலையே பெற்றுள்ளது. எனினும், இருக்கை அமைப்பும், பின்புற  மட்கார்டும் மட்டுமே ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு உரிய தனித்துவத்தை பெற்றிருக்கின்றன.  இந்த மோட்டார்சைக்கிளில் ஸ்போக்ஸ் வீல், பெட்ரோல் டேங்கில் ஜாவா நிறுவனத்தின் பிராண்டு முத்திரை, பிரேக் சிஸ்டம், கைப்பிடிகள் மற்றும் டெயில் லைட் கிளஸ்ட்டர் ஆகியவை பழைய ஜாவா மோட்டார்சைக்கிள்களை  பிரதிபலிக்கும் விதத்தில், மாற்றம் அதிகம் இல்லாமல் கொடுக்கப்பட்டு இருப்பதும் முக்கிய சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில், ஜாவா நிறுவனத்தின் 293சிசி இன்ஜின் இடம்பெற்றிருக்கும் என  கருதப்படுகிறது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பியூயல் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதால், இது நவீன யுக  இன்ஜின் என கூற முடியும். அத்துடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதும் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. இது, பழைய ஜாவா மோட்டார்சைக்கிள் போன்றே, இரட்டை குழல் சைலென்சர்களுடன் வர இருக்கிறது.


இந்த இன்ஜின் நடுத்தர நிலையில், மிகச்சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கும். அத்துடன், 2 ஸ்ட்ரோக் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் போன்றே, தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் பெற்றிருக்கும்  என்பது ஜாவா பிரியர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இப்புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல் அறிமுகம் செய்யப்பட  உள்ளது. இது, இந்தியாவில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நிச்சயம் நேரடி போட்டியை கொடுக்கும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment