வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning -42 - 06/11/2018
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning -42 - 06/11/2018

தினம் ஒரு நாலடியார்



பாடல் - 42.




தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்
.

அர்த்தம் :






தோலாகிய போர்வையின் மீதும் துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வையினால், பெருமையுடையதாக இருக்கிறது இவ்வுடம்பு! அப்படி ஆதலால், மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment