வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு?



தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல்பிரீத் சிங், தற்போது சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார். 

 
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் கிழிந்த சட்டை அணிந்துள்ள தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


அந்த படத்தின் கீழ் ‘‘எவ்வளவு உயரத்துக்கு போனாலும் குழந்தைத்தனமான மனதை மட்டும் இழக்க கூடாது’’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படத்தை பார்த்த பலரும் ரகுல் பிரீத்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பிச்சைக்காரர்கள் கூட நல்ல சட்டைபோடும் இந்த காலத்தில் பிச்சைக்காரர்களை விட கேவலமாக சட்டை போட்டு இருக்கிறீர்களே என்று சிலர் கண்டித்து உள்ளனர்.



உங்களுக்கு நல்ல சட்டை வேண்டுமானால் கேளுங்கள் நான் அனுப்பி வைக்கிறேன் என்று இன்னும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். நடிகை டாப்சியையும் இந்த ஆடை அதிர வைத்துள்ளது.  அவர், ‘‘இவ்வளவு மோசமான ஆடையை தைத்து கொடுத்தவர் யார்?’’ என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி விடுத்தார். அதற்கு ரகுல் பிரீத் சிங், ‘‘எனது குழந்தைத்தனமான மனது’’ என்று பதில் அளித்துள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment