வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஊரே ஒன்று கூடி அழுதது... முருகனும் ஊருக்குள் வரவேயில்லை.. இப்படியும் ஜனங்களா??
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 09, 2018

ஊரே ஒன்று கூடி அழுதது... முருகனும் ஊருக்குள் வரவேயில்லை.. இப்படியும் ஜனங்களா??


இந்த காலத்திலயும் இப்படியும் ஒரு கிராமம் இருக்கா? இப்படியும் ஊர் ஜனங்க இருப்பாங்களா என்று ஆச்சரியமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊர் இண்டூர் கோரப்பள்ளி. இங்கு வசிப்பவர்தான் செல்வம். இவர் தன்னுடைய மகன் முருகனை பி.இ. வரை படிக்க வைத்தார். முருகனுக்கு வயசு 28 ஆகிறது.


ஊரைவிட்டு ஓடினர் 
 இந்நிலையில் முருகன் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர். 20 வயது நிரம்பிய அந்த பெண்ணும் முருகன் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் வழக்கம்போல் இரு வீட்டிலும் எதிர்ப்பு.. தகராறு.. கிளம்பியது. இப்படி ஓயாமல் இரு வீட்டிலும் பிரச்சனை இருந்து கொண்டே இருந்ததால், எப்படியும் இரு வீட்டாரும் தங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க போவதில்லை என்ற நினைத்தனர். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
எதிர்ப்பு அதிகமானது
 அதற்காக இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் கல்யாணமும் செய்து கொண்டார்கள். கல்யாணம் ஆனாலும் எதிர்ப்பு அதிகமானது. இப்போது இரு வீட்டாரையும் விட ஊரே கோபமாகிவிட்டது. 2 பேரையும் ஊருக்குள் எப்பவுமே சேர்க்க கூடாது என முடிவெடுத்தும் விட்டது. அதனால் எந்த சூழ்நிலையிலும், நல்லது, கெட்டது எதுவானாலும் ஊருக்குள் இந்த காதல் ஜோடி வரவே முடியாத நிலை ஏற்பட்டது.


உயிரிழந்த செல்வம்
 இந்த நேரத்தில் நேற்று முன்தினம் முருகனின் அப்பா செல்வம், திடீரென ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். சாலை விபத்து என்பதால் உடனடியாக விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையிலிருந்து சடலம் வீட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தயாரானது.


போலீசார் குவிப்பு
 செல்வத்தின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரப்படுவதை அறிந்து ஏராளமானோர் குவிந்துவிட்டனர். அதேபோல, தந்தையின் சடலத்தை பார்க்க மகன் எப்படியும் வருவார் என்று நினைத்து இரு சமூகத்தினரும் முருகனை ஒரு கை பார்த்துவிட தயாராக இருந்தனர். முருகன் வந்ததும் இரு சமூகமும் எந்த கலவரத்தையும் ஆரம்பித்து விடக்கூடாது என்பதை அறிந்த போலீசாரும் அதிக அளவில் ஊருக்குள் குவிக்கப்பட்டனர்.


ஊரே ஒன்றுகூடி அழுதது
 ஒரு பக்கம் செல்வத்தின் சடலத்தை காண உறவினர்களும், முருகன் எப்போது வந்தாலும் தகராறு செய்துவிடுவது என ஊர்ஜனங்கள் ஒரு பக்கமும், எந்த நேரத்திலும் சாதி மோதல் உருவாகிவிடக்கூடாது இன்னொரு பக்கம் போலீசாரும் என குவிந்திருந்தனர். பாலக்கோடு மருத்துவமனையிலிருந்து செல்வம் உடல் வந்தது... ஊரே ஒன்று கூடி அழுதது... முருகனும் ஊருக்குள் வரவேவில்லை.. கடைசியில் அடக்கமும் செய்துவிட்டது.


ஆஸ்பத்திரியில் முருகன் 
ஆனால் நடந்ததோ வேறு!! விஷயம் என்னவென்றால், இப்படி ஊர்ஜனமே ஒன்றுகூடி காத்திருப்பது முருகன் காதுக்கு எட்டிவிட்டது. அதனால் அப்பாவின் உடலை பார்ப்பதற்காக நேராக ஆஸ்பத்திரிக்கே போய்விட்டார் முருகன்.


இறுதி சடங்கு
 எப்படியும் ஊருக்குள் நம்மை விட மாட்டார்கள் என்பதை அறிந்த முருகன், ஆஸ்பத்திரிலேயே தன் தந்தையின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்தார். அப்பாவை கட்டி பிடித்து கதறி அழுதவாறே முருகன் சடங்கினை செய்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை கனமாக்கியது. இந்த விஷயம் கடைசிவரை ஊருக்குள் தகராறு செய்ய காத்திருந்தவர்களுக்கு தெரியவே தெரியாது. எனினும் தற்போதும், ஊருக்குள் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment