"என்னை யாருன்னு நெனைச்சே... எல்லார் மாதிரியும் நான் கிடையாது...
தொலைச்சு போட்டுட்டு... போயிட்டே இருப்பேன்" இப்படித்தான் போலீசாரை எம்பி
ஒருவர் மிரட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இப்படி போலீசாரை உருட்டி மிரட்டி எடுப்பவர் நீலகிரி அதிமுக எம்பி
கோபாலகிருஷ்ணன்தான். இவர், இதற்கு முன் குன்னூர் நகராட்சி தலைவராக
இருந்தவர். கடந்த 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி
தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஜெயிச்சதோடு சரி, தொகுதி பக்கம் இவர்
வந்து 4 வருஷமாகிவிட்டது.
காணவில்லை
எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை, எந்த மக்கள் பிரச்சனையையும் இதுவரை
கண்டு கொண்டதே இல்லை. இப்படி ஒரு எம்.பி., இருப்பது கூட மாவட்ட மக்களுக்கு
சரிவர தெரியாது. இவர் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்காததால், இவர் போட்டோவை
போட்டு, "காணவில்லை" என்று போஸ்டர் கூட ஒட்டப்பட்டுவிட்டது. (தொடர்ச்சி கீழே...)
சர்ச்சை எம்.பி
அப்போதுகூட இவர் எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதனால் நிர்வாகிகள்
சிலர் இவருக்கு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த
எம்பி ஒரு மேடையில் தன் கட்சிக்காரர்களேயே ஒருமையில் வசைபாடி, அசிங்கமாக
திட்டி தீர்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போதுவரை இவர்
குன்னூருக்கும் டெல்லிக்கும் பறந்தபடியேதான் இருப்பார்.
மூடியிருந்த கார் கண்ணாடி
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, குன்னூர் லெவல் கிராசிங்
பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இரவு நேரம்
என்பதால் ஒவ்வொரு வண்டியாக செக் செய்து கொண்டே இருந்தார்கள். அப்போதுதான்
எம்பி கார் அங்கே வந்தது. காரை ஓட்டி வந்தது எம்.பியேதான். தற்போது
ஊட்டியில் கடுங்குளிர், பனி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் கார்
கண்ணாடி மூடியே இருந்ததால், உள்ளே இருப்பது யார் என்று போலீசாருக்கு
தெரியவில்லை.
டிராக்சூட் அணிந்த எம்பி
அதனால் காரை செக் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளே இருந்தவரை கீழே இறங்கி
வர சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு காரிலிருந்து சத்தத்தையே காணோம்..
யாருமே கீழே இறங்கி வராததால் போலீசார் மீண்டும் மீண்டும் சைகை காட்டி கீழே
இறங்கி வர சொன்னார்கள். பிறகு டிராக்சூட் அணிந்த எம்பி காரிலிருந்து
கெத்தாக இறங்கி வந்து போலீசாரை பார்த்தார். ஆனால் இப்படி தங்கள் முன்னால்
வந்து நிற்பது அந்த தொகுதி எம்பி என்றுகூட போலீசாருக்கு அப்போதும் தெரியவே
இல்லை. அதனால் கீழே இறங்கி வந்த எம்பி, அவராகவே பேச தொடங்கிவிட்டார்.
தொலைச்சிடுவேன்
அங்கிருந்த எஸ்ஐ-யை நோக்கி, "எதுக்கு நீங்க பேட்ரோலிங்கா இருக்கீங்க. என்னை
யாருன்னு நெனைச்சே... தொலைச்சிடுவேன்... என மிரட்டினார். உங்க எஸ்பி.,
டிஎஸ்பி எல்லாரையும் கூப்பிடு... எல்லாத்தையும் ஒழுங்கா வேலையை பாக்க
சொல்லு... எல்லார் மாதிரியும் நான் கிடையாது... புரியுதா? தொலைச்சு
போட்டுட்டு போயிட்டே இருப்பேன்" என சரமாரியாக மிரட்டிவிட்டு, காரில் ஏறி
பறந்தார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பினை அறிவித்து...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம..
No comments:
Post a Comment