வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கழுத்து வலி, முதுகு வலியை குணமாக்கும் பிசியோதெரபி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

கழுத்து வலி, முதுகு வலியை குணமாக்கும் பிசியோதெரபி


நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 


 ‘இயன்முறை மருத்துவம்’ என்பது மருந்துகள் இன்றி இயற்கையாக உடற்பயிற்சியின் மூலம் உடலை பக்குவப்படுத்தும் மருத்துவ முறையாகும். இது உடல் இயக்கத்தை முறைப்படுத்தும் மருத்துவத் துறையாகும்.  ஒருவர் காயம் அல்லது நோயால் பாதிக்கப்படும்போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்கும். அப்போது இயன்முறை மருத்துவம் தான் உடற்பயிற்சி மூலம் உடலை இயக்க நிலைக்கு கொண்டு வந்து அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க துணை செய்கிறது. (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!

பெரும்பாலானோர் மூட்டுவலி, கழுத்துவலி, முதுகு வலி, ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 75 சதவீதம் பேர் இயன்முறை மருத்துவத்தால் குணமடைந்துள்ளனர் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.  பிறக்கும் போதே சில குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர். மற்றும் கை, கால் மடிந்து அல்லது பிறந்த பிறகு கீழே விழுந்து பாதிப்படைகிறது. அப்போது அதனை மருந்தால் சரிசெய்ய இயலாது. இயன்முறை மருத்துவம் செய்யப்பட்டு அது சரி செய்யப்படுகிறது.



விபத்தால் சிலர் கை, கால் மற்றும் எலும்பு முறிவுகளை அடைகின்றனர். அதனை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்க ‘பிசியோதெரபி’ முறை பயன்படுத்துகின்றனர்.  மருந்துகள் இன்றி மருத்துவம் பயன்படுத்தும் ஒரே மருத்துவம் ‘இயன்முறை மருத்துவம்’ மட்டுமே.  உடல் பருமனை உடற்பயிற்சி மூலமே சுலபமாக குறைக்க முடியும். அன்றாட செய்யும் உடற்பயிற்சியால் உடல் எடை மற்றும் மூட்டுவலி இருதய பிரச்சினை அனைத்தும் சரி செய்ய இயன்முறை மருத்துவம் பெரிதும் உதவுகிறது.



நாள்தோறும் புதிய வியாதிகளும், பலப்பல புதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் ‘பிசியோதெரபி’ மருத்துவத்தின் பங்கு மருத்துவத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment