வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

டேய் தம்பி... உனக்கு சீன் போட வேற வழியே தெரியலயா…! உசுர விட பாத்தியே…!



சென்னையில் அரசு பஸ்ஸில் கல்லூரி மாணவர் கெத்து காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோமாளி தனங்களில் ஈடுபட்டார். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


சென்னை கல்லூரி மாணவர்கள் மத்தியில் பஸ்களிலும் எலெக்ட்ரிக் ரயில்களிலும் ஆபத்தான நிலையில் பயணம் செய்வது என்பது வாடிக்கையான விஷயமாகி விட்டது. அவ்வப்போது அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் செய்திகளாகி வருகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இந்த பிரச்னை பல ஆண்டுகளாக இருந்தாலும் சமீப காலமாக இவ்வாறு வீர தீர சாகசம் என்ற பெயரில் கோமாளி தனங்களை செய்யும் மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுகின்றனர்.


இது பெரும் வைரலாகி பொதுமக்களின் கவனங்களுக்கு செல்கிறது. இதை பார்க்கும் மற்ற சில இளைஞர்களும் இது போன்ற செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்தாண்டு பட்டாக்கத்தியுடன் வாலிபர்கள் சிலர் எலெக்ட்ரிக் ரயிலில் கத்தியை சுத்தியபடியும், பிளாட்பாரங்களில் நெருப்பு பொறி கிளம்பும் படி கத்தியை உரசியபடியும் பயணித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக்கில் சென்ற சில இளைஞர்கள் ரோட்டில் தடுப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டை இழுத்துக்கொண்டே சென்றனர்.


மேலும் இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டெக்டர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. பஸ்ஸில் பயணிக்கும் பயணி இது போன்ற செயலில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக பஸ்ஸை நிறுத்தி அவர்களை இந்த செயலை செய்வதை தடுக்க வேண்டும் ஆனால் அதையும் இவர்கள் செய்ய தவறியுள்ளனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.


இதற்கிடையில் இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை பஸ்ஸின் டிரைவர் கண்டெக்டர்கள் கண்டித்தாலும், அந்த செயலில் ஈடுபடுவபர்களுடன் சேர்ந்து வந்த சிலர் கூட்டமாக டிரைவர் மற்றும் கண்டெக்டர்களை மிரட்டியும் ரகளையும் செய்து வருவதாக பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
இது போன்று கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு பஸ்களில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment