இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம். இது பற்றிய விவரம்
வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப் படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் (ஆண்-பெண்) போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கனை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1-7-1994 மற்றும் 30-6-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1994 மற்றும் 30-6-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர் காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-11-2018-ந் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. 30-11-2018-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

(தொடர்ச்சி கீழே...)

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
பாலிவுட்டில் அதிக வயது வித்தியாசமுள்ள ஜோடி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பாலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவர் தனது தங்கை வயது மக...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மேல்மருவத்தூர் அருகே உள்ள இராமாபுரம் கிராமத்தில் குழந்தை திருமணம் தடுப்பு ப...
-
கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலிலில் உருவான குறைந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 11 ஆம் தேதி புயலாக மாறியது. இந்த புயலுக்...
-
சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
No comments:
Post a Comment