வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மகள் என பாசமழை பொழிந்து.. மயக்கம் கொடுத்து நண்பர்களுடன் சீரழித்த காமுகன் கைது..
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

மகள் என பாசமழை பொழிந்து.. மயக்கம் கொடுத்து நண்பர்களுடன் சீரழித்த காமுகன் கைது..



தஞ்சாவூர் மாவட்டத்தில் இளம்பெண்ணிடம் தந்தை போல் பழகி மயக்க மருந்து கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் சன்னதி தெருவில் ஜவுளிக் கடை ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் பணிபுரிந்து வந்தார். இவர் தந்தையை இழந்தார். இங்கு கடை உரிமையாளரின் நண்பர் சின்னப்பா அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது கடையில் பணிபுரியும் பெண்களுடன் தந்தை ஸ்தானத்தில் பழகி வந்துள்ளார்.


நம்பிய பெண் 
இதன் விளைவாக கடந்த 7-ஆம் தேதி இளம்பெண்ணை தீபாவளி விருந்துக்காக வீட்டுக்கு வந்து செல்லும்படி சின்னப்பா அழைத்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும் சென்றுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

குளிர்பானம் 
அப்போது அவரது வீட்டில் சின்னப்பாவை தவிர வேறு யாரும் இல்லை. இதையடுத்து சின்னப்பா கொடுத்த குளிர்பானத்தை அந்த பெண் குடித்துள்ளார். இதையடுத்து அவர் மயங்கியுள்ளார். சில மணி நேரம் கழித்து மயக்க தெளிந்த பெண்ணுக்கு உடல் முழுவதும் வலி் ஏற்பட்டுள்ளது.


செல்லப்பட்டார் 
பின்னர் வீட்டுக்கு வந்த போது அந்த பெண்ணுக்கு அதிகளவில் உதிரப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

போலீஸில் புகார்
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருந்ததை தெரியப்படுத்தினர். பெண்ணின் உறவினர்கள் சின்னப்பா மீது கும்பகோணம் மகளிர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

புகார் மனு 
மருத்துவர்கள் கூட்டுப் பலாத்காரம் நடந்துள்ளதால் மருத்துவர்கள் கூறியதால் சின்னப்பாவுடன் சேர்ந்து இந்த காரியத்தை செய்த மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மாவட்ட எஸ்பியிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment