பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக
மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும்.
படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின்
நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும்
மிகச் சில நகரங்களுள் முக்கியமான
இங்கு ஒருவர் இயற்கை எய்தினாலோ அல்லது அவரது இறுதிச்சடங்கு இங்கு
நிறைவேற்றப்பட்டாலோ அவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து
சாஸ்வதமாக விடுபட்டு, மோக்ஷத்தை அடைவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அதனால் இது, விடுதலை அளிக்கக்கூடிய இடம் என்ற அர்த்தம் தொனிக்குமாறு
'முக்தி ஸ்தலா' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், கங்கை நதியில் ஒரு
முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோசனம்
கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
வாரணாசி உங்களுக்கு தெய்வீகத்தோடு உறவாடும் ஒரு நிகரற்ற அனுபவத்தை
வழங்குகிறது. இந்நகரின் தனிச்சிறப்பு யாதெனின், அது கங்கை நதிக்கு
அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள் போல் அமைந்துள்ள படித்துறைகளே ஆகும்.
இங்கு காணப்படும் சில முக்கிய படித்துறைகளுள் ஒன்றான தசாஸ்வமேத்
படித்துறையில் தான் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆராதனைகள்
செய்யப்படுகின்றன. (தொடர்ச்சி கீழே...)
சிவ வழிபாடு
கங்கை நதிக்கரையில் உள்ள சிவலிங்கத்தை வழிபடும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.
சலவைக்காரர்கள்
வாரணாசியின் படித்துறைகளில் துணிகள் சலவை செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.
சூர்ய அஸ்த்தமனத்தில்...
சூர்ய அஸ்த்தமனத்தின் போது கங்கை நதியில் இனிமையான படகுப்பயணம்.
பாம்பின் மீது நடனம்
காளிங்கன் என்ற பாம்பின் மீது நடனமாடிய ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகள் சடங்காக கடைபிடிக்கப்படும் காட்சி.
படகுப்பயணம்
காசி வந்துவிட்டு கங்கை நதியில் படகுப்பயணம் செய்யாமல் ஊர் திரும்புவது
முற்றுப்பெறாத பயணமாகவே அமையும். எனவே குடும்பத்தோடு படகுப்பயணம் சென்று
வாருங்கள்.
சைக்கிள் ரிக்ஷாக்கள்
காசியின் நெருக்கடி மிகுந்த வீதிகளில் செல்லும் சைக்கிள் ரிக்ஷாக்கள்.
காசி மன்னர்
காசி மன்னர் என்றறியப்படும் நரேஷ் அனந்த் நாராயன் சிங், 2011-ஆம் ஆண்டு
நாக் நாதையா திருவிழாவில் கலந்துகொள்வதற்காக படகில் வரும் காட்சி.
அமைதியான நதியினிலே ஓடம்!
அமைதியான கங்கை நதியின் அலைகளுக்கிடையே ஒரு படகுப் பயணம்!
கங்கா படித்துறை
வாரணாசியில் உள்ள கங்கா படித்துறை ஒரு அதிகாலை நேரத்தில்.
மால்வியா பாலம்
வாரணாசியில் கங்கை நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள மால்வியா பாலம்
டஃப்ஃபரின் பாலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 1887-ஆம் ஆண்டே
கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு இரண்டடுக்கு பாலம் என்பது கூடுதல் சிறப்பு.
அதாவது கீழ் தளத்தில் ரயில் செல்லும்படியாகவும், மேல் தளத்தில் மற்ற
வாகனங்கள் செல்லும்படியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆணிப்படுக்கை
ஆணிப்படுக்கையில் சர்வ சாதாரணமாக படுத்திருக்கும் யோகி.
குழல் வாசிக்கும் சாது!
புல்லாங்குழல் இசைக்கும் வாரணாசி சாது.
அகோரி பாபா
காசியில் காணப்படும் அகோரிகளில் ஒருவர்.
கஞ்சா
காசியில் கஞ்சா இழுக்காத சாதுக்களையே பார்க்க முடியாது.
எருமைக்குளியல்
கங்கை நதியில் எருமையை குளிப்பட்டும் ஒருவர்.
பெனாரஸ் பட்டு
காசிக்கு பெனாரஸ் என்று பெயர் வந்தததற்கு பெனாரஸ் பட்டுதான் காரணம். நீங்கள் காசி வரும்போது பெனாரஸ் பட்டு வாங்க மறந்துவிடாதீர்கள்.
புனித பசு
காசியின் சந்தைகளில் சுதந்திரமாக திரியும் புனித பசு.
மிதக்கும் பாலம்
காசியில் கங்கை நதியின் மீது உருவாக்கப்பட்டிருக்கும் மிதக்கும் பாலம்.
டேபிள் ஃபேன் ஃபேக்டரி
வாரணாசியில் உள்ள டேபிள் ஃபேன் ஃபேக்டரி ஒன்று.
பெனாரஸ் பான்
இந்திய முழுவதும் பெனாரஸ் பான் என்பது பிரபலம். நீங்கள் வாரணாசி வரும்போது பெனாரஸ் பானை சுவைக்க தவறிவிடாதீர்கள்.
எங்கும் செல் ஃபோன்
செல் ஃபோன் இல்லாத இடம் எங்கே? பிராத்தனை கூட்டத்துக்கு நடுவே செல் ஃபோனில் பேசும் ஒருவர்.
திதி
கங்கை நதியில் திதி கொடுக்கும் குடும்பம்.
கூட்டுக் குளியல்
குருகுல மாணவர்கள் கூட்டாக கங்கை நதியில் ஸ்நானம் செய்யும் காட்சி
குஜராத் முதல்வர்
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி வழிபாடு செய்யும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
பூக்கடை
வாரணாசியின் படித்துறை ஒன்றில் பூக்கள் விற்கும் சிறுமி.
தேவ் தீபாவளி
தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து
கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண
நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து
ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர்
மாதத்தில் குழுமுகிறார்கள்.
ஒளிரும் படித்துறைகள்!
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண
விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப்
பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த அலங்கார விளக்குகளின்
அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. அதோடு
பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை
நிலவுகிறது. அது எப்படியோ தெரியாது ஆனால் நம் பூமியில் உள்ள தேவதைகளை அந்த
நேரத்தில் பார்க்க தவறவிட்டுவிடக்கூடாது!!!
கங்கா ஆர்த்தி
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தசஸ்வமேத் படித்துறையில் ஒவ்வொரு
நாளும் சூரிய அஸ்த்தமனத்தின் போது கங்கா ஆர்த்தி நடைபெறும். ஆனால் தேவ்
தீபாவளி அன்று நடக்கும் மகா ஆர்த்தி வெகு விசேஷமாக ஆயிரக்கணக்கான பயணிகள்
மற்றும் பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. அப்போது கங்கா ஆர்த்தி 21
பிராமண அர்ச்சகர்கள் மற்றும் 24 இளம் மங்கைகளால் நிகழ்த்தப்படுகிறது.
வீரர்களுக்கு வீரவணக்கம்!
தசஸ்வமேத் படித்துறையில் கங்கா ஆர்த்தி நடைபெற்றுக்கொண்டிருக்கும்
அதேவேளையில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதியில் இராணுவ
வீரர்களால் வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. அப்போது
நாட்டுப்பற்றுமிக்க பாடல்களும், பஜன்களும் பாடப்படுகின்றன. அதோடு பகீரத்
சௌர்ய சம்மன் என்ற விருதும் இந்த தருணத்தில் இராணுவ வீரர்களுக்கு
வழங்கப்படுகிறது.
கார்த்திகை ஸ்நானம்
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் தீபாவளி அன்று தலைக்கு எண்ணை வைத்து
கங்கா தீர்த்தத்தை குளியல் நீரில் கலந்து குளிப்பது வழக்கமாக இருக்கிறது.
அதேபோல கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி
கொண்டாடும்போது காசியில் உள்ள கங்கை நீரில் நீராடுவர். இவ்வாறு நீராடுவதால்
வாழ்கையில் செய்த பாவங்கள் அனைத்தும் கங்கை நீரில் சென்றுவிடுவதாக
பக்தர்கள் நம்பி வருகிறார்கள்.
கலாச்சார பிரவாகம்!
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நம் கலை மற்றும்
கலாச்சாரத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களை போன்ற கலா ரசிகர்கள்
கண்டிப்பாக தேவ் தீபாவளி அன்று காசி வர வேண்டும். அப்போது இசை, நடனம்,
கைவினைப்பொருட்கள் கண்காட்சி என்று இந்திய பாரம்பரிய கலைகளின் சங்கமமே
இங்கு நடந்தேறு
ஆற்றில் மிதக்கவிடப்படும் அகல் விளக்குகள்!
நம்ம ஊர் திருவிழாக்களில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி ஆற்றில் விடும்
கட்சியை நம்மில் சிலர் பார்த்திருக்கலாம். அதேபோலத்தான் காசியிலும் தேவ்
தீபாவளி பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கங்கை நதியில்
மிதக்கவிடப்படுகின்றன. அப்போது படித்துரைகளோடு சேர்ந்து கங்கை நதியும்
ஒளிவெள்ளத்தில் மிதக்கும்!
தர்பங்கா படித்துறை
தசாஸ்வமேத் மற்றும் ராணா மஹால் ஆகிய படித்துறைகளுக்கு இடையே அமைந்துள்ள
தர்பங்கா தொடர் ராஜ குடும்பத்தின் பெயரிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
இப்படித்துறை தவிர்த்து, நதியின் கரையோரத்தில் நிகழும் சடங்குகள் மற்றும்
இதர சம்பிரதாயங்களை ராஜ குடும்பத்தினர் கண்ணுறும் வகையில் 1900 களில், ஒரு
பிரம்மாண்டமான அரண்மனை, ராஜ குடும்பத்தினரால் இங்கு நிர்மாணிக்கப்பட்டது.
தசாஸ்வமேத் படித்துறை
வாரணாசியில் கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள படித்துறைகளுள் தசாஸ்வமேத்
படித்துறை தான் மிகப் பழமையான, கம்பீரமான படித்துறையாகும். இதன் வரலாறு
ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிந்தையதாகும்.
கியூவில் நிற்கும் பிணங்கள்
மணிகர்னிகா படித்துறையில் சில நேரம் பிணங்கள் அதிகமாக எரியூட்டப்பட
இருக்கின்ற சந்தர்பத்தில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். இறந்த
பின்பும் கியூவில் நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது?!
படித்துறைகள்
கங்கை நதிக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் போன்ற அமைப்பினாலான இந்த
படித்துறைகள் பல்வேறு கோயில்களைக் கொண்டு, சமயம் சார்ந்த அனைத்து
நடவடிக்கைகளும் நடைபெறும் முக்கிய மையமாகத் திகழ்கின்றன. இங்கு மொத்தம் 84
படித்துறைகள் இருக்கின்றன
புனித நீராடல்
கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள்
அனைத்திலிருந்தும் விமோசனம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
யாத்ரீகர்கள் பலர் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்த்தமனத்தின் போதும்
இந்நதியில் புனித நீராடுகின்றனர்.
முக்தியின் கதை
அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின்
இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில்
பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. அன்றிலிருந்து
ஏராளமானோர் கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை
முத்தியடையச் செய்து வருகின்றனர்.
பழமையான நகரம்
பெனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக
மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும்.
இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள்
அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
பழமையான நகரம்
பழமையான நகரம்
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment