கள்ளக்காதலியை கொலையும் செய்துவிட்டு, சடலத்துக்கு பக்கத்திலேயே விடிய
விடிய விழித்து கொண்டு உட்கார்ந்திருந்திருக்கிறார் ஒருவர்!!
திருச்சி அருகே உள்ள சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்தான்
நடராஜன். 31 வயதான நடராஜன் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார். தற்போது குளித்தலை
அருகே ஒரு கட்டிட பணி நடந்து வருகிறது. அங்குதான் வேலைக்கு சென்று
கொண்டிருக்கிறார். கட்டிட வேலை செய்யும் இடத்தில்தான் லீலா அறிமுகமானார்.
லீலா ஒரு விதவை. 11 வருஷங்களுக்கு முன்பே கணவனை பறிகொடுத்தவர். 10 வயதில்
ஒரு மகன் இருக்கிறான். மகனை காப்பாற்றவும், பிழைப்பு நடத்தவும் லீலா இந்த
கட்டிட வேலைக்கு வந்தார். வந்த இடத்தில் நடராஜனின் நட்பு கிடைத்தது. இந்த
பழக்கம் கள்ளக்காதல் வரை கொண்டு வந்து விட்டது. அடிக்கடி இருவரும் ஜாலியாக
இருந்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
கண்டித்த நடராஜ்
ஆனாலும் லீலா வேறு ஆண்களுடன் அடிக்கடி பேசுகிறார் என்று நடராஜனுக்கு
சந்தேகம் வந்தது. இந்த சந்தேகம் வலுத்து கோபம், ஆத்திரமாக வந்து பலமுறை
லீலாவை கூப்பிட்டு கண்டித்துள்ளார். ஆனாலும் லீலா தொடர்ந்து ஆண்களுடன் பேசி
வந்ததால் இருவருக்கும் நிறைய சண்டை வந்துள்ளது.
அம்மிக்கல் கொலை
இந்த நிலையில், நேற்றிரவு நடராஜ் லீலாவை தன் வீட்டுக்கு வரவழைத்தார்.
அப்போது, சொல்ல சொல்ல கேட்காமல் ஏன் வேறு ஆண்களுடன் பேசுகிறாய் என்று
நடராஜன் கேட்க, லீலா சண்டைக்கு போக... கடைசியில் இருவருக்கும் வாக்குவாதம்
முற்றிவிட்டது. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த நடராஜ், அங்கிருந்த
அம்மிக்கல்லை கொண்டு வந்து லீலாவின் தலையிலேயே போட்டார். இதில் லீலா சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.
விடிய விடிய காவல்
லீலாவின் உயிர் தன் கண்ணெதிரிலேயே பிரிந்தவுடன், நடராஜூக்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை. இரவு நேரம் வேறு. வீட்டிலும் வேறு யாரும் இல்லை.
பிணத்தை என்ன செய்வது, எங்கு கொண்டு போவது என்றும் புரியவில்லை. அதனால்
பேசாமல் பிணத்துக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார். இப்படியே விடிய
விடிய நடராஜ் லீலா உடலின் அருகே உட்கார்ந்திருந்தார்.
போலீசில் சரண்
இன்று காலை நடராஜின் தாய் வீட்டிற்குள் வந்தார். அப்போதுதான் ஒரு பெண் கொலை
செய்யப்பட்டு கிடப்பதையும், பக்கத்தில் மகன் உட்கார்ந்திருப்பதையும்
பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மகனை சோமரசம்பேட்டை போலீஸ்
ஸ்டேஷனில் போய் சரணடையுமாறு கூறினார். அதன்படியே சரணடைய சென்ற நடராஜை
போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமான விசாரணை போய்க் கொண்டு இருக்கிறது.
No comments:
Post a Comment