வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: டூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம்! செல்லூர் ராஜூ திட்டம் காப்பி அடித்த சீனா.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

டூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம்! செல்லூர் ராஜூ திட்டம் காப்பி அடித்த சீனா.!



மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் செல்லூர் ராஜூவை வைத்து விண்டு மில் காமெடியை சுதாகரும், கோபியும் அரங்கேயிருப்பது நமக்கு ஞாபகம் வரலாம். வெயில் காலங்களில் அனைத்து பொது மக்களுக்கு வெட்கை அதிமாக இருக்கும். இதை தடுக்க வானில் ஏசி வைக்கலாம் என்று செல்லூர் ராஜூ செல்வதை போல, சுதாகர் நடித்து இப்பார். இதை கேள்வி கேட்கும் நிருபராக கோபி நடித்து இருப்பார்.


அதில் உயரமான கம்பம் வைத்து, விண்டு மில்லுக்கு பதிலாக ஏசியை வைத்தால் அனைவரும் வெட்கை இல்லாமல் குளு குளு என்று இருப்பார் என்று செல்லூர்ராஜூ செல்வதை போல இந்த காமெடி இருக்கும். 
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதுக்கு பல லட்சம் கோடியாகும் என்று செல்லூர் ராஜூ செல்வதை போல சுதாகர் கூறுவார். இதை பார்த்த தோ இல்லை. செல்லூர் ராஜூவை நேரடியாக கூப்பிட்டு யோசனை கேட்டதோ என்று இந்த நிகழ்வை பார்த்து நமக்கும் தோன்றுகின்றது. அப்படி என்ன திட்டம் என்றால் விண்ணில் டூப்ளிகேட் நிலவை செலுத்தி அனைத்து மக்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் திட்டம். சீனா அனைத்து நாடு கண்டுபிடிப்புகளையும் காப்பி அடிக்கும் சீனா செல்லூர் ராஜூவின் திட்டத்தை காப்பி அடித்துள்ளது என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.


அமைச்சர் செல்லூர் ராஜூ:
அமைச்சர் செல்லூர் ராஜூ திட்டம் அரங்கேற்றிய திட்டம் உலகறிய செய்தது. இதற்கு காரணம் தெர்மா கோல் திட்டம் தான். அமைச்சர் செய்த செயலை கண்டு யாருக்கும் சிரிப்பு வராமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு தொமர்மாகோல் வைகை அணையில் இறங்கிய முதலே அதன் வேலை காண்பிக்க ஆரம் வைத்து விட்டது. சுமார் 50 தெர்மா கோயிலுக்கு இத்தனை லட்சமாக என்று மீம்ஸ்களில் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

பல்வேறு திட்டம்:  
செல்லூர் ராஜூ இதுபோல் ஏராளமான திட்டங்கள் வைத்துள்ளார் என்று பேஸ்புக், டுடிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களிலும் மீம்ஸ் போட்டு ஏராளமானோர் கலாய்த்து வந்தனர்.

சீனாவின் போலி நிலா திட்டம்: 
 பூமியின் நிலவை போன்ற வடிவத்தில் செயற்கைகோள்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. முதலில் செங்க்டு என்ற நகரத்தில் தெருவிளக்குகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு செயற்கை நிலாவை இரவு நேரங்களில் பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.


எட்டு மடங்கு பிரகாசம்:
பூமியின் நிலவை விட எட்டு மடங்கு பிரகாசமாக இருக்கக்கூடிய செயற்கை நிலவு, 2020ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என சீனா கூறியுள்ளது. சூரியனின் ஒளியை பிரதிபலிக்கும் பேனல்கள் மூலம் செயற்கை நிலா பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ல் மூன்று செயற்கை நிலவுகள்:
சீனாவின் செங்க்டு நகரத்திற்கு எவ்வாறு செயற்கை நிலவு பயன்படுகிறது என்பதை பொருத்து, 2022ம் ஆண்டு மூன்று செயற்கை நிலவுகளை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

300 கோடி மிச்சமாகுமா:  
50 சதுர கிலோமீட்டர் அளவு கொண்ட செங்க்டு நகரத்திற்கு செயற்கை நிலவு பயன்படுவதன் மூலம் ஆண்டுக்கு ஆயிரத்து 300 கோடிக்கு மேல் மிச்சமாகும் என தெரிகிறது.


ஒளிமாசு அதிகரிக்கும்:  
அதேநேரத்தில் திட்டமிட்டப்படி செயற்கை நிலா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு செயல்பட தொடங்கினால் ஒளி மாசு 40 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நம்ம ஊர் மக்கள் கிண்டல்: 
இந்த திட்டத்தை உங்களுக்கு சொல்லி கொடுத்தது அமைச்சர் செல்லூர் ராஜூவா, இல்லை அவரின் திட்டத்தையும் யோவ் சீனாகாரா நீங்கள் காப்பி அடித்து விட்டீர்களா என்று செல்லும் அளவுக்கு இந்த திட்டம் இருக்கின்றது

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment