வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 22, 2018

முன்னாள் காதலரை கொன்று உடலை வெட்டி பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண்



முன்னாள் காதலரை கொன்று பிரியாணி போட்டு பிறருக்கு கொடுத்த பெண் அபுதாபி: அபுதாபியில் பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ளார்.
மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.


இந்த காரணத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து உடலை துண்டு போட்டு அரிசி, கறியுடன் சேர்த்து பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக அளித்துவிட்டார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
தாங்கள் சாப்பிடுவது மனித கறி என்று தெரியாமல் அவர்களும் சாப்பிட்டுள்ளனர். மீதமுள்ள கறியை அவர் நாய்க்கு போட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரிய வந்துள்ளது
 
கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்தபோது தான் தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment