அண்டாவுக்குள் மூழ்கி பெத்த குழந்தைகளையே கொன்ற கொடூர தாயை பண்ருட்டி
போலீசார் கைது செய்துள்ளனர்.
கட்டமுத்துபாளையம் கிராமத்தை சேர்ந்த தம்பதி சிலம்பரசன் - ஜெயசித்ரா.
கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் மிதுன், 7 மாதத்தில் லக்ஷன் என்ற
இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அண்டாவில் முக்கினார்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லக்ஷன் வீட்டில் இருந்த அண்டா தண்ணீரில்
மூழ்கி இறந்துவிட்டான். இதையடுத்து ஜெயசித்ரா தலைமறைவானார். பிறகு போலீசார்
அவரை கண்டுபிடித்து விசாரித்தனர். அதற்கு ஜெயசித்ரா, "குழந்தை அண்டாவில்
தெரியாமல் தவறி விழுந்து இறந்துவிட்டது... என் மேல சந்தேகப்பட்டு
கோபப்படுவார்கள் என்றுதான் தலைமறைவாகி விட்டேன்" என்று சொன்னார். இதனால்
போலீசாரும் சிலம்பரசனும் பெரிதாக்காமல் இந்த சம்பவத்தை விட்டுவிட்டனர். (தொடர்ச்சி கீழே...)
வாஸ்து சரியில்லை
இதையடுத்து, ஜெயசித்ரா, "இந்த வீடு சரியில்லை, வாஸ்துப்படி இல்லாததால்தான்
நம் மகன் இறந்துவிட்டான், அதனால் வேற வீடு மாத்தலாம்" என சிலம்பரசனை
தொந்தரவு செய்துள்ளார். அதன்படியே சிலம்பரசனும் மனைவி மற்றும் மகன் மிதுனை
கூட்டிக் கொண்டு பனங்குப்பம் பகுதியில் குடியேறினார். மகனை ஒரு தனியார்
பள்ளியில் யூ.கே.ஜியும் சேர்த்துவிட்டார்.
ஸ்கூலுக்கு வரவில்லை
சம்பவத்தன்று, சிலம்பரசன் வேலைக்கு போய்விட, ஜெயசித்ரா, வீட்டில் மகன்
மிதுடனுடன் தனியாக இருந்திருக்கிறார். அப்போது மிதுன் கூஸ்லுக்கு வரவில்லை
என்று சிலம்பரனுக்கு நிர்வாகம் தரப்பில் போன் செய்து தகவல் அளிக்கப்பட்டது.
மகன் ஏன் ஸ்கூலுக்கு போகவில்லை என்பதை அறிய வீட்டு ஹவுஸ் ஓனருக்கு
சிலம்பரசன் போன் செய்தார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, வீட்டில் யாருமே
இல்லையே என்று சொல்லிவிட்டனர்.
அண்டாவில் சடலம்
இதை கேட்ட சிலம்பரசன், தன் அப்பா-அம்மாவை கூப்பிட்டு வீடு வரைக்கும் என்ன
நிலைமை, 2 பேரும் எங்க போயிருக்காங்க என்று பார்த்து வரும்படி சொன்னார்.
அதன்படியே பெற்றோரும் வீட்டுக்கு வந்து பார்த்தால், பாத்ரூமில் உள்ள
தண்ணீர் தொட்டியில் மிதுன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ந்தனர். ஆனால்
மருமகளை காணவில்லை என்பதால் அவர்தான் மகனை கொன்றிருக்க வேண்டும் என்று
வளவனூர் போலீசில் புகார் அளித்தனர்.
மேல்மருவத்தூர்
தலைமறைவாகி இருந்த ஜெயசித்ராவை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு
போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரது செல்போன் நம்பர்களை
வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டும் ஆய்வு செய்தனர். இந்த
நிலையில் 2 குழந்தைகளையும் கொன்ற ஜெயசித்ரா மேல்மருவத்தூர் அருகே ஒளிந்து
கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காரணம் என்ன?
உடனடியாக விரைந்து சென்ற போலீசார் பதுங்கியிருந்த ஜெயசித்ரா மற்றும்
அவருக்கு துணையாக இருந்த அவரது பெற்றோரை கைது செய்தனர். அவர்களிடம் துருவி
துருவி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பெத்த குழந்தைகளை தாயே இப்படி
கொடூரமாக கொன்றது ஏன்? பின்னணி நிலவரம் என்ன என்பதெல்லாம் இனி வரும்
விசாரணையில்தான் தெரியவரும். ஆனால் மூன்றே மாத இடைவெளியில் அடுத்தடுத்து 2
குழந்தைகளையும் பறிகொடுத்த சிலம்பரசனை யாராலும் தேற்ற முடியவில்லை.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment