"பேரன், பேத்தி எடுத்தாச்சு, இனிமேல் 'அதுக்கு' வரமாட்டேன்" என்று
மறுத்த பெண்ணை கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார்.
தாராபுரம்-திருப்பூர் சாலையில் நஞ்சியம்பாளையம் அருகே உப்பாறு பாலம்
உள்ளது. இந்த பாலத்தின் கீழே போன மாசம் 25-ம் தேதி ஒரு பெண்ணை கொலை செய்து
சாக்கு மூட்டையில் கட்டி போட்டிருந்தார்கள்.
போலீசார் விரைந்து அழுகிய நிலையில் கிடந்த பெண்ணை மீட்டு இது சம்பந்தமான
நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கொள்ளை முயற்சி இல்லை
35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடம்பிலிருந்து தங்கத்தாலி, வளையல்,
தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால்
அந்த பெண் யார், என்ன என்று உடனே தெரியவில்லை. நகைகள் எல்லாம் அப்படியே
உடம்பில் இருப்பதால் கொள்ளை முயற்சிக்காக இந்த கொலை செய்யப்படவில்லை என
தெரிந்தது.
காட்டி கொடுத்த இன்ஷியல்
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது. அத்துடன் பெண்ணின்
கழுத்தில் கிடந்த தாலியில் பி.ஜே. என்ற ஆங்கில எழுத்து
பொறிக்கப்பட்டிருந்ததால் அதை வைத்தும் தனியாக விசாரணை நடத்தினர். அந்த
தாலியை எடுத்து கொண்டு கவுந்தம்பாடி கடைவீதிகளில் விசாரிக்கப்பட்டது.
(தொடர்ச்சி கீழே...)
தீவிர விசாரணை
அப்போது கிடைத்த தகவல்படி உயிரிழந்த பெண் முருகன் என்பவரின் மனைவி
முத்துலட்சுமி என்று தெரியவந்தது. இந்த நிலையில்தான் முத்துலட்சுமியை கொலை
செய்தோம் என்று 2 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தார்கள். தங்கள் பெயர்
வேலுசாமி, குமரேசன் என்றார்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
நடத்தினார்கள். அதில் வேலுசாமி சொன்னதாவது:
பேரன் - பேத்திகள்
"எனக்கு 45 வயதாகிறது. என் மனைவியின் அக்காதான் முத்துலட்சுமி. முருகன்
என்பவர்தான் முத்துலட்சுமியின் கணவர். ஆனால் எனக்கும் முத்துலட்சுமிக்கும்
கள்ள உறவு ரொம்ப வருஷமாகவே இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லை
என்பதால், முத்துலட்சுமியை உறவுக்கு கூப்பிட்டேன். ஆனால், அவரோ, பேரன்
பேத்திகள் எடுத்தாச்சு. இனிமேலும் இதெல்லாம் என்னால் முடியாது என்று
மறுத்தார்.
இறுக்கி கொன்றேன்
அதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது. உடனே என் அக்கா மகள் குமரேசனை
கூப்பிட்டு, அவன் உதவியுடன் முத்துலட்சுமியை வேனில் கடத்தி சென்றேன்.
வழியில் திரும்பவும் உறவுக்கு அழைத்தேன். அப்போது எங்களுக்குள் சண்டை
வந்துவிட்டது. முடியவே முடியாது என்று முத்துலட்சுமி என்னுடன் வாதம்
செய்தார். அதனால் ஆத்திரம் அடைந்த நான் என் கழுத்தில் போட்டிருந்த துண்டு
வைத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.
உப்பாற்று பாலம்
என்னிடம் இருந்த சாக்கு பையில் அவரது உடலை கட்டி உப்பாற்று பாலத்தில்
வீசிவிட்டேன். அதற்கு குமரேசனும் உதவியாக இருந்தார். எப்படியும் போலீசார்
எங்களை பிடித்து விடுவார்கள் என்று தெரிந்ததால் நாங்களாகவே சரணடைந்தோம்"
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து இருவரையும்
போலீசார் கைது செய்தனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment