`காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சூர்யா, அஜித்,
மாதவனுடன் நடிக்கும் போது சவுகரியமாக இருக்க முடியும் என்று நடிகை ஜோதிகா
கூறினார்.
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,
‘காற்றின்
மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும்
என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த
படங்களில் முக்கியமான படமாக ‘36 வயதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’
அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார்.
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,
ரீமேக்
படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை
பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம்
ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை
சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி
பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக
கருதுகிறேன். (தொடர்ச்சி கீழே...)
இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு
கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’
படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக
நடிப்பேன். ‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள்
ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில்
எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு.
அந்தப் படத்தில்
நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது.
முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.
இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
ஒருசில
நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும்.
சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன்.
இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம..
No comments:
Post a Comment