வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. சானியா மிர்சா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை இல்லையாம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

பஞ்சாயத்தை கூட்டுங்கப்பா.. சானியா மிர்சா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை இல்லையாம்



பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நல்ல செய்தி வந்த அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் இந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா அல்லது பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்குமா என்ற தேவையற்ற விவாதங்கள் கிளம்பின. தற்போது, பாகிஸ்தான் இணையதளம் (துன்யாநியூஸ்) ஒன்றில் சானியா மிர்சா குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை
 ஷோயப் மாலிக் - சானியா மிர்சா இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அப்போதிருந்தே, இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் இவர்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் குரல் எழுப்பி வருகின்றனர். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

குடியுரிமை குழப்பம்
 சானியா மிர்சா கருவுற்றதை அறிவித்த நாளில் இருந்ததே குழந்தையின் குடியுரிமை பற்றிய பேச்சுக்கள் கிளம்பின. அப்போது ஷோயப் மாலிக், "எந்த நாட்டு குடியுரிமை கிடைக்கும் என்பது முக்கியமல்ல. என் குழந்தை பாகிஸ்தானியும் இல்லை, இந்தியனும் இல்லை" என கூறி இருந்தார்.



பாக். குடியுரிமை கிடைக்காது
 தற்போது வந்துள்ள இணையதள செய்தியில், பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியானது சானிய மிர்சாவின் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கப்படாது என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இரட்டை குடியுரிமை ஒப்பந்தம் 
 அதற்கு காரணம், பாகிஸ்தான் இந்தியாவோடு இரட்டை குடியுரிமை ஒப்பந்தம் போடவில்லை. சானியா மிர்சா இன்னும் இந்திய குடியுரிமையோடு தான் இருக்கிறார். அதனால், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. குழந்தை தற்போது இந்தியாவில் ஹைதராபாத் நகரில் பிறந்துள்ளது. எனவே, இந்திய குடியுரிமை கிடைக்குமா என்ற கேள்விக்கும் பதில் இல்லை.


இணையத்தில் பஞ்சாயத்து
 ஏற்கனவே, இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இணையதளவாசிகள் மாலிக் - சானியா மிர்சா தம்பதி பற்றிய பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்காது என்ற செய்தி வந்துள்ளதால், இன்னும் என்னென்ன பஞ்சாயத்தில் எல்லாம் ஈடுபட போகிறார்களோ தெரியவில்லை.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment