வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பெண்களின் பாதுகாப்பிற்காக பஸ், கால் டாக்ஸிகளில் புதிய வசதிகள்... இனி அச்சமின்றி பயணம் செய்யலாம்...
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

பெண்களின் பாதுகாப்பிற்காக பஸ், கால் டாக்ஸிகளில் புதிய வசதிகள்... இனி அச்சமின்றி பயணம் செய்யலாம்...



எந்நேரம் என்றாலும் பெண்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும், பஸ், கால் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மத்திய அரசின் அதிரடி உத்தரவு காரணமாக அமலுக்கு வரவுள்ள இந்த புதிய வசதிகள், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் பஸ் மற்றும் கால் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வழிகளில் பயணம் செய்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இருப்பதில்லை. இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், நிர்பயா என்ற மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அடுத்த விபரீதம் அரங்கேறியது. 
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
அதே டெல்லி நகரில், 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், 25 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் உபேர் என்ற கால் டாக்ஸியில் பயணம் செய்தார். அப்போது உபேர் கால் டாக்ஸியின் டிரைவர் ஷிவ் குமார் யாதவ் என்பவரால், அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுகுறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில், உபேர் கால் டாக்ஸியின் டிரைவர் ஷிவ் குமார் யாதவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.


இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்த பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததை ஷிவ் குமார் யாதவ் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டின் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அனைவரும் குற்றம் சாட்டினர். இவ்விரு சம்பவங்களுக்கு பின், பஸ் மற்றும் கால் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்த பெண்கள் மத்தியில் தயக்கம் உருவானது. குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் தனியாக பயணிப்பது என்பது சவால் நிறைந்த காரியமாக மாறிப்போனது.


எனவே பொது போக்குவரத்து முறைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க தொடங்கின. இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான ஒரு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி 2019ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு பிறகு பதிவு செய்யப்படும் அனைத்து புதிய பொது போக்குவரத்து வாகனங்களிலும், வாகனம் எங்கே உள்ளது? என்பதை டிராக் செய்யும் Vehicle Location Tracking Device கட்டாயம் இடம்பெற வேண்டும்.


அதுமட்டுமல்லாமல் அவசர கால பட்டன்கள் (emergency buttons) இடம்பெறுவதையும் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''2019ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு பிறகு பதிவு செய்யப்படும் அனைத்து புதிய பொது போக்குவரத்து வாகனங்களிலும், டிராக்கிங் டிவைஸ் மற்றும் அவரச கால பட்டன்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.


பஸ்கள், கால் டாக்ஸிகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். ஆனால் ஆட்டோ ரிக்ஸாக்கள் மற்றும் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களுக்கு மட்டும், இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளோம். இந்த உத்தரவை எவ்வாறு அமல்படுத்த வேண்டும்? என்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள மற்றும் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை பதிவு செய்யப்படும் பொது போக்குவரத்து வாகனங்களில், மேற்கண்ட பாதுகாப்பு டிவைஸ்களை எப்போது இன்ஸ்டால் செய்வது? என்பதை, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம். ஏனெனில் இந்த டிவைஸ்களை கண்காணிப்பதற்கான பேக் எண்ட் (Back-end) வசதிகளை பெரும்பாலான மாநிலங்கள் இன்னும் ஏற்படுத்தவில்லை. ஆனால் 2019ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் இந்த டிவைஸ்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.



இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''வாகனங்களின் இயக்கத்தை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்காத வரை, டிராக்கிங் டிவைஸ் இன்ஸ்டால் செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை. கட்டுப்பாட்டு அறைகளை அமைக்காவிட்டால், அவை வெறும் டிவைஸ்களாக மட்டுமே இருக்கும்'' என்றார். எனினும் இந்த சந்தேகத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் உரிய விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மாநில அரசு அல்லது டிராக்கிங் டிவைஸ் உற்பத்தியாளர்களால் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் நிச்சயமாக ஏற்படுத்தப்படும்'' என்றார். மத்திய அரசின் இந்த உத்தரவு பயணிகள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment