போலி டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் பணம் திருடி வந்த
வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து
70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.
மையம் அருகே வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டு
இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்றனர்.
(தொடர்ச்சி கீழே...)
அப்போது ஏ.டி.எம். மையம் அருகே நின்று கொண்டிருந்த
வெளிநாட்டு ஆசாமி, போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதனால்
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி பிடித்தனர்.
இதையடுத்து
அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 60 டெபிட், கிரெடிட்
கார்டுகள் மற்றும் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம் இருந்தன.
போலீசார்
அவரிடம் இருந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை கைப்பற்றி
விசாரித்தனர். இதில் அவை அனைத்தும் குளோனிங் முறையில் தயார் செய்யப்பட்ட
போலி கார்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வெளிநாட்டு
ஆசாமியை அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் இருந்த
பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர், ருமேனியா நாட்டை சேர்ந்தவர்
ஆவார். அவரது பெயர் கேரவன் மரியன் (வயது49) ஆகும். இவர் கடந்த ஜூன் மாதம்
இந்தியாவிற்கு சுற்றுலா விசா மூலம் வந்துள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம்,
குஜராத் ஆகிய இடங்களில் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை
குளோனிங் முறையில் போலியாக தயாரித்து ஏ.டி.எம். மையத்தில் பணத்தை திருடி
வந்தது தெரியவந்தது.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 19-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment