ஜாதி மாறி திருமணம் செய்த காதல் ஜோடி காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி
நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரும், கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம்,
சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சுவாதியின்
குடும்பத்தார் ஆணவ கொலை செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர்
நந்தீஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரைவிட உயர்ந்த ஜாதியை சேர்ந்த
சுவாதி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
(தொடர்ச்சி கீழே...)
இதற்கு சுவாதி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று மாதங்களுக்கு
முன்பு, குடும்பத்திற்கு தெரியாமல், திருமணம் செய்துகொண்டு ஓசூரில் வாடகை
வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென தம்பதிகள் மாயமாகிவிட்டனர். நந்தீஷின் சகோதரர்
சங்கர் கடந்த 11ம் தேதி முதல் புதுமண தம்பதிகள் இருவரையும் காணவில்லை என
ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார்
இவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மலவள்ளி தாலுக்காவில்
சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து இரண்டு உடல்களை மீட்ட போலீசார்
விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த உடல்கள் நந்தீஷ் மற்றும் சுவாதியுடையது
என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பெண்ணின் தந்தை உட்பட உறவினர்கள் மூன்று பேர் கிருஷ்ணகிரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்து உள்ளனர். மாற்று
சமுதாயத்தை சார்ந்த காரணத்தால் ஆணவ படுகொலை செய்யப்பட்டிருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment