வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?




நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட் ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பலவகையான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம். 



அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் 'என்னவெல்லாம்' செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!



#1 திறந்தவெளி வைபை : 
பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
#2 சேர்ச் ஹிஸ்ட்ரி :
 ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.




இந்தியா : 
 கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



#3 போஸ்ட் அல்லது ட்வீட் : 
மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.


#4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் : 
வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



#5 வீடியோவில் நடனம் :
 ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.


ரஷ்யா : 
 ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment