வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

சீன இளைஞரின் அக்கப்போர்.. பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்கி படாதபாடு!



எது எதில்தான் விளையாடுவது என்றே தெரியவில்லை. சீனாவில் ஒரு இளைஞர் செய்த செயலால் நாடே பரபரப்பாகியுள்ளது. ஸாங் என்கிற ஒரு இளைஞரை பற்றிதான் இப்போ சீனா முழுக்க பேச்சு. எப்பவுமே தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டே இருப்பாராம். அதிலும் பெட் கட்டி விளையாடுவது என்றால் ரொம்ப பிடிக்குமாம்.

20 செ.மீ. நீள ஸ்பூன்
 இப்படித்தான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார். அந்த விளையாட்டு என்னவென்றால், ஒரு ஸ்பூனை அப்படியே விழுங்க வேண்டும் என்பதுதான்! இதற்காக 20 செ.மீ. நீளமுள்ள பிளாஸ்டிக் ஸ்பூனை விழுங்குவதாக பெட் கட்டப்பட்டது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
கவலைப்படவே இல்லை 
 அதன்படியே இந்த இளைஞரும் அந்த ஸ்பூனை லபக்-கென்று விழுங்கிவிட்டார். இதை பார்த்த நண்பர்கள் எல்லோருக்கும் ஷாக் ஆகிவிட்டது. அதை விட ஷாக் என்னவென்றால், அந்த ஸ்பூனை விழுங்கியதால் உடம்பில் எந்த பிரச்சனையும் இளைஞருக்கு வரவே இல்லை என்பதுதான். அதுமட்டும் இல்லாமல் விழுங்கிய ஸ்பூனை பற்றிய யாருமே கவலைப்படவும் இல்லை.


சிரமப்பட்டு ஆபரேஷன் 
 இப்போ பிரச்சனை என்னவென்றால் தொண்டை வலி கொஞ்சம் கொஞ்சமாக இளைஞருக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு திடீரென மூச்சுக்குழலும் அடைத்துக் கொண்டது. இதனால் மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப்பட்டார். அதனால் சின்ஜியாங்கோல்மைன் என்ற மருத்துவமனைக்கு இளைஞர் கிளம்பி சென்றார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை, என்னன்னு பாருங்கள் என்று டாக்டர்களிடம் சொல்ல, டாக்டர்களோ எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோதுதான் தெரிந்தது மூச்சுக்குழலில் 20 செ.மீ. ஸ்பூன் இருந்தது!!


பேச முடியலையாம் 
ஸ்பூனை தொண்டையில் பார்த்ததும் விக்கித்து நின்ற டாக்டர்கள், இப்படி ஒரு கேஸை வாழ்க்கையில் நாங்க பார்த்ததே இல்லை என்று சொல்லி, ஆபரேஷன் செய்து அந்த ஸ்பூனை வெளியே எடுத்தார்கள். ஆனால் ஆபரேஷன்தான் கொஞ்சம் கஷ்டமாக போய்விட்டதாம். இப்படி விபரீதமாகும்படி விளையாட்டு விளையாடியதால் வினை என்ன தெரியுமா? இளைஞருக்கு பேச முடியவில்லையாம்.



ஜெயித்தாரா? தோத்தாரா? 
 கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்குமாம்... மெதுவாகதான் சரியாகி பேச முடியும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். அது சரி... ஒரு சந்தேகம்... ஒரு வருஷமாக ஸ்பூன் தொண்டையிலே இருந்திருக்கிறது என்றால் இளைஞர் தனது விளையாட்டில் வைத்த பெட்-டில் தோற்றாரா? ஜெயித்தாரா?

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment