இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து தூங்குவதால் நமக்கு
ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு யுக்திகளை கடைபிடித்து வருகின்றனர். இரவில் துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் மூடி தூங்குபவர்களும் உண்டு. ஆனாலும் முதுகில் உஷ்ணத்தை உணர்வார்கள்.
(தொடர்ச்சி கீழே...)
இந்த மாதிரியெல்லாம் முயற்சிக்கும் நாம் படுக்கை விஷயத்தில் கவனம் இல்லாமல் இருப்போம். இரும்புக் கட்டில், நவீன மெத்தைகளில் படுத்துக்கொண்டு வெட்கையை விரட்ட நினைப்போம். அது சாத்தியமல்ல. இதற்கு நம் பாரம்பரிய முறையே சரியான வழி. கோரைப் பாயை உபயோகிப்பதுதான் இதற்கு சிறந்த தீர்வு. இன்னும் பெரும்பாலான கிராமங்களில் படுக்கை விரிப்பாக கோரைப் பாயையே உபயோகித்து வருகிறார்கள்.
தென்னங்கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. முதன் முதலில் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்டன. பின்பு நாணல் புற்களைக் கொண்டும், நீர்ப்பகுதிகளில் வளரும் கோரைப்புற்களைக் கொண்டும் பாய்கள் தயாரிக்கப்பட்டன.
இப்போது கம்பளி, பிரம்பு, ஈச்சம், பேரீச்சம், மூங்கில், இலவம் போன்றவற்றில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல் நலனுக்கு உகந்தவையாகும். இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்து தூங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. பின்னாட்களில் தான் கோரைப்பாய் நெய்தார்கள்.
ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப் புற்கள் வளர்கின்றன. இந்த கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். கோரை என்பது ஒரு தாவரம். கரும்பு போலவே இருக்கும். ஆறு மாதம் வரை வந்தவுடன் அறுவடை செய்யலாம். பிறகு இரண்டாக கிழித்து காய வைத்து அதை நெய்வார்கள். இந்த கோரைப்பாய் உடல் சூட்டை குறைக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கு பயன்படுத்துவார்கள். கப்பல்களில் பயன்படுத்துவார்கள்.
இன்றைக்கு பிளாஸ்டிக் நுழையாத இடமே இல்லை என்றாகிவிட்டது. பாயிலும் பிளாஸ்டிக் வந்துவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் இம்மாதிரியான பாய்கள் அதிகமாக வாங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை. கோரைப்பாய் போன்ற இயற்கையான பாய்களைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியம். மேலும் அழிந்து வரும் ஒரு தொழிலுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
கணவன், மனைவி உறவின் நடுவே ஒளிவுமறைவு இருக்க கூடாது என்று கூறுகிறது நம் சமூகம். ஆனால், இங்கே எல்லாருடைய உறவும் இப்படி இருக்கிறதா என்.
No comments:
Post a Comment