ஷாருக்கானை நேரில் பார்க்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தனது
கழுத்தை அறுத்துக் கொண்டார்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த 2ம் தேதி தனது 53வது பிறந்தநாளை
கொண்டாடினார். நள்ளிரவில் ஷாருக்கானின் பங்களாவான மன்னத்திற்கு முன்பு
ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள்.
தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நோக்கி ஷாருக்கான் கையசைத்து பறக்கும்
முத்தம் கொடுத்தார்.
கவலை
மும்பை தாராவி பகுதியை சேர்ந்த முகமது சலீம் அலாவுத்தீன் என்பவர் தனக்கு
பிடித்த நடிகரான ஷாருக்கானை காண நேற்று அவரின் வீட்டிற்கு முன்பு அதிகாலை
நேரம் முதலே நின்று கொண்டிருந்தார். சுமார் 3 மணிநேரம் அங்கு
காத்திருந்தும் அவரை காண முடியவில்லை. இதனால் மனமுடைந்த அலாவுத்தீன் தான்
வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். (தொடர்ச்சி கீழே...)
மருத்துவமனை
ஷாருக்கான் வீட்டிற்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த
போலீசார் அங்கு சென்று அலாவுத்தீனை மீட்டு அருகில் உள்ள பாபா
மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அந்த நபரை தூக்கிச் சென்றபோது ஷாருக்
சார் என்று அவர் கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. கழுத்தை அறுத்த பிறகும்
அவர் அங்கிருந்து வர மறுத்ததால் போலீசார் தூக்கிச் சென்றனர்.
ஷாருக்கான்
அலாவுத்தீன் செய்த காரியத்தால் ஷாருக்கானின் பங்களா உள்ள பகுதியில் சிறிது
நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து மன்னத் அருகே செல்ல
ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிளப்
முன்னதாக ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றது.
ஊரே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த கிளப்பில் பாட்டு சத்தம் ஓவராக
இருந்ததால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வந்து பார்ட்டியை
நிறுத்தினார்கள். போலீசார் வந்ததும் ஷாருக்கான் மற்றும் அவருடன் வந்தவர்கள்
அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment