வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட "தில்" நாய்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

சீறுவது சிறுத்தையாக இருந்தால் எனக்கென்ன.. குரைத்தே தலைதெறிக்கவிட்ட "தில்" நாய்!


நாய்களுக்கு இவ்வளவு வீரம் இருக்குமா? என்று இதுவரை நமக்கு தெரியாது. கடந்த சில தினங்களுக்கு ஒடிசாவில் பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பு ஒன்றினை நாய் தன் முன்னங்கால்களின் நக விரல்களை கொண்டே கீறி கீறி கொன்றே விட்டது. தற்போது ஊட்டியிலும் நாயின் வீரம் செறிந்த போராட்டம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

நாய் குரைத்தது 
 ஊட்டி அருகே உள்ள கேத்தி பாரத் நகரை சேர்ந்த வசந்தகுமார். இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2, 3 நாட்களாகவே நாய் குரைத்து கொண்டே இருந்திருக்கிறது. குறிப்பாக நைட் ஆனதும் நாய் குரைக்க ஆரம்பிக்கவும் வசந்தகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் விடிந்ததும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை எடுத்து, நாய் ஏன் இப்படி கத்தியது என்று ஆராய்ந்தார். (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
ஹாலில் சிறுத்தை 
 அப்போதுதான் தெரிந்தது, வசந்தகுமார் வீட்டு ஹாலிலேயே சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்திருக்கிறது. இந்த சிறுத்தையை பார்த்ததும்தான் நாய் சத்தமாக குரைக்க தொடங்கியது. 2 நாளாக நைட் டைமில் குரைத்து குரைத்தே அந்த சிறுத்தையை விரட்டியும் இருக்கிறது. ஹாலில் உட்கார்ந்துதான் சிசிடிவி கேமராவை வசந்தகுமார் ஆய்வு செய்தார்.


பீதியில் மக்கள்
 இப்போது தூக்கி வாரிப்போட்டது அவருக்கு. சிறுத்தை எப்படி வீட்டுக்குள் வந்தது என தெரியவில்லை. ஆனால் நாய் மட்டும் கத்தி கத்தியே விரட்டி இருக்காவிட்டால் இந்நேரம் என்ன ஆகியிருக்குமோ என தெரியவில்லை என்ற அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார் வசந்தகுமார். இந்த விஷயத்தை அக்கம்பக்கம் சொல்லவும் அவர்களும் சிறுத்தை எப்ப வேணும்னாலும் வந்துவிடுமோ என்று பயத்தில் உள்ளனர்.


குரைத்தே விரட்டியது 
 கூண்டு வைத்து சீக்கிரமாக சிறுத்தையைப் பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தன் வீட்டு ஹாலில் சிறுத்தை பதுங்கியதையும், அதை நாய் விரட்டிய காட்சியின் சிசிடிவி காட்சியை வசந்தகுமார் வெளியிட்டுள்ளார். அமைதியாக பதுங்கி இருந்து நாயை பிடிக்க உஷாராக சிறுத்தை காத்திருந்தால், அதைவிட ஷார்ப்-ஆக நாய் செயல்பட்ட வீடியோதான் வைரலாகி வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment