குழந்தையை காருக்குள் அடைத்து வைத்து கொல்ல முயன்ற பெற்றோர்…! உ.பி.யில் பரபரப்பாகிய கோர சம்பவம்..!
அதிகரித்து வரும் நாகரீக பழக்க வழக்கங்களால் குழந்தை வளர்ப்பு என்பது இன்று பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை குழந்தை வளர்ப்பு என்பது மிக சாதாரணமாக இருந்த நிலையில் இன்று குழந்தைகளை வளர்ப்பதற்கு தனியாக பயிற்சிகள் எல்லாம் எடுக்கும் நிலை வந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய தலைமுறையினர் தற்போதைய தலைமுறையினருக்கு குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் என்ன? குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சரியாக சொல்லி தர தவறிவிட்டனர்.
உ.பி மாநிலத்தில் ஷாப்பிங் செல்ல குழந்தையை அழைத்து செல்ல விருப்பம்
இல்லாத பெற்றோர் காருக்குள்ளேயே குழந்தையை பூட்டி வைத்து கொல்ல முயற்சி
செய்துள்ளனர். தக்க சமயத்தில் அருகில் இருந்தவர்கள் சுதாரித்ததால் காரின்
ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இச்சம்பவம் வட
மாநிலங்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (தொடர்ச்சி கீழே...)
அதிகரித்து வரும் நாகரீக பழக்க வழக்கங்களால் குழந்தை வளர்ப்பு என்பது இன்று பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை குழந்தை வளர்ப்பு என்பது மிக சாதாரணமாக இருந்த நிலையில் இன்று குழந்தைகளை வளர்ப்பதற்கு தனியாக பயிற்சிகள் எல்லாம் எடுக்கும் நிலை வந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய தலைமுறையினர் தற்போதைய தலைமுறையினருக்கு குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் என்ன? குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சரியாக சொல்லி தர தவறிவிட்டனர்.
இதனால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு குழந்தை வளர்ப்பு
பற்றி சரியாக தெரியவில்லை. பலருக்கு குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
அவர்களது தேவை என்ன? என்பதை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வட இந்தியாவில் ஒரு மனதை
உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை
நிறைவடைந்த சூழ்நிலையில் தீபாவளிக்கு முந்தைய சில நாட்கள் ஷாப்பிங் செய்ய
மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்
தீபாவளி விமரிசையாக கொண்டாப்படுவதால் தீபாவளி சமயம் இந்தியாவில்
பெரும்பாலான பகுதிகள் விழாகோலம் பூண்டிருக்கும். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் மீரட்டிலும் மக்கள் தீபாவளிக்காக
கடந்த நவ.5ம் தேதி பிஸியாக பர்சேஸ் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுதுதான்
யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தீபாவளி ஷாப்பிங்கில் மற்றவர்களை போல ஒரு தம்பதியும் ஷாப்பிங் செய்ய
விரும்பி தங்களது காரில் தங்களது 1.5 வயது குழந்தையுடன் சென்றனர். அவர்கள்
சென்ற பகுதியில் தீபாவளி நேரம் என்பதால் அதிக கூட்டமாக இருந்தது. கடைகளில்
ஜன நெருக்கடி கட்டுக்கு அடங்காத நிலையில் இருந்தது. இந்த கூட்டத்திற்கு இடையில் தங்களது குழந்தையுடன் ஷாப்பிங் செய்ய
கஷ்டமாக இருக்கும் என நினைத்த தம்பதி தங்களது குழந்தையை காருக்குள்ளேயே அமர
வைத்து விட்டு, குழந்தை வெளியே வர முடியாத படி காரையும் பூட்டி விட்டு
காரின் ஜன்னல் கண்ணாடிகளையும் ஏற்றி வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் குழந்தையை தனியாக விட்டு சென்று விட்டு பிஸியாக ஷாப்பிங்
செய்ய துவங்கிவிட்டனர். காருக்குள் சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்த
குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் காரின் ஜன்னல்
கண்ணாடியை தட்டி தட்டி குழந்தை அழுதுள்ளது.
குழந்தை காருக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதையும், அந்த குழந்தை உள்ளே
மாட்டிக்கொண்டு மூச்சுவிட சிரமப்படுவதையும் அந்த காருக்கு அருகில் இருந்த
ஒரு சிலர் பார்த்தனர். உடனே அந்த குழந்தையின் பெற்றோரை தேடினர். அவர்கள்
அந்த பகுதியில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக உதவிக்கு சிலரை அழைத்து அவர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்து
குழந்தையை மீட்கும் பணியை துவங்கினர். இதற்கிடையில் காரின் கண்ணாடியை
உடைத்து குழந்தையை மீட்கும் தகவல் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து காரின் கண்ணாடிகளை உடைக்க உதவி
செய்தனர்.உடனடியாக காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே மூச்சுவிட
திணறி கொண்டிருந்த குழந்தை மீட்கப்பட்டது.
அதன் பின்னர் அந்த குழந்தையின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்
அவர்களிடம் நடந்ததை கூறிய போலீசார் அவர்களுக்கு இனி இது போன்று
குழந்தைகளை தனியாக விட்டு விட்டு செல்ல வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர்.
தனியாக காருக்குள் இருந்த குழந்தைக்கு எப்படி திடீர் என மூச்சு திணறல்
ஏற்பட்டது? நாமும் காரில் செல்லும் போதோ உட்கார்ந்திருக்கும் போதோ அது
போன்று ஏற்படுவதில்லையே குழந்தை இருக்கும் போது அப்படி ஏற்பட என்ன
காரணம் என உங்களால் யூகிக்க முடிகிறதா? கீழே அதற்கான உண்மையாக காரணத்தை
வழங்கியுள்ளோம் தொடர்ந்து படியுங்கள். பொதுவாக கார்களில் ஜன்னல்களை எல்லாம் அடைத்து விட்டு ஏசியையும் ஆஃப்
செய்து விட்டால் விரைவாக காருக்குள் வெப்பம் அதிகமாகி விடும். இதற்கு
காரணம் பைங்குடில் விளைவு (Greenhouse effect) தான்.
பொதுவாக காரை நாம் ஆஃப் செய்து விட்டு ஜன்னல் கண்ணாடிகளை முழுமையாக
மூடிவிட்டு சென்றால் காருக்குள் இருக்கும் காற்று வெளியேற போதுமான இடம்
இல்லாமல் திணறும். இதனால் முதலில் அங்கு காற்று சுழற்சி குறையும். காற்று
சுழற்சி குறைவதால் வெளியில் உள்ள வெப்பத்தை உள்ளே உள்ள காற்று வாங்க
துவங்கும். சில நிமிடங்களில் காருக்குள் உள்ள காற்றின் வெப்ப அளவு அதிகரிக்கும்.
தொடர்ந்து அதிகரிக்கும் வெப்ப அளவின் காரணமாக காருக்குள் சூடான வெப்பம்
உருவாகும். இதனால் காருக்குள் ஆக்ஸிஜனின் அளவு குறையும். பொதுவாக காரை நிறுத்தி விட்டு ஜன்னல்களை மூடிவிட்டு சென்றால்
காருக்குள் இருக்கும் வெப்பம் 10 நிமிடங்களில் 20 டிகிரி வரை அதிகரிக்கும்
என்றும், 1 மணி நேரத்தில் சுமார் 40 டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சில
ஆய்வுகள் சொல்கிறது.
இதனால் காரை நீங்கள் போதுமான நிழலில் மரத்தடி போன்ற குளிர்ச்சியான
இடத்தில் நிறுத்தி ஜன்னல்களை முழுமையாக மூடி ஏசியையும் ஆஃப் செய்து விட்டு
சென்றாலும் நிச்சயமாக காருக்குள் இருக்கும் வெப்பம் அதிகரித்து விடும். இப்படியாக நீங்கள் காரின் ஜன்னல் கண்ணாடிகளை முழுமையாக மூடிவிட்டு,
ஏசியையும் ஆஃப் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் காருக்குள்
யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காருக்குள் யாரையாவது
விட்டு விட்டு அப்படியாக நீங்கள் சென்றால் அது நீங்கள் அவர்களை கொலை
செய்வதற்கு சமமாகும்.
மீரட்டில் நடந்த சம்பவம் போல வெளிநாடுகளில் அடிக்கடி இது போன்ற
சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். சிலர் தங்களது குழந்தைகளை
இவ்வாறாக காருக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்று விடுவார்கள்.
இதனால் குழந்தை மூச்சு திணறி பலியான சம்பவங்கள் வெளிநாடுகளில் அதிகம்
நடந்துள்ளன. பலர் தங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை இது போன்று காருக்குள்
வைத்து பூட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த செல்ல பிராணிகளும்
பலியாகும் சம்பவங்களும் அதிகமாக நடந்துள்ளது. ஆனால் இந்த பழக்கம்
இந்தியாவில் அதிக அளவில் இல்லை.
ஆனால் சமீபகாலமாக பரவி வரும் மேற்கத்திய கலாச்சாரத்தால் இளம்
தலைமுறையினருக்கு பொறுப்புகள் என்ன என்பதும், அதை அவர்கள் எப்படி
காப்பாற்ற வேண்டும் என்பதும் தெரியாமல் போகிறது. பலர் அஜாக்கிரதையாக
இருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது. கார்களை வாங்கும்
முன் அதன் நன்மை தீமைகளை பற்றி பெரும்பாலானோர் நினைப்பதில்லை. வெறும்
பெருமைக்காக கார்களை வாங்கிவிட்டு பின்னர் அதை பயன்படுத்த தெரியாமல்
பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
இனி நீங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காரில்
வெளியே சென்றால் உங்கள் குழந்தைகளையோ, செல்ல பிராணிகளையோ, முதியவர்களையோ
காரில் தனியாக விட்டு விட்டு ஜன்னல்களை முழுமையாக பூட்டி விட்டு,
ஏசிகளையும் ஆஃப் செய்து விட்டு செல்ல வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால்
அது நீங்கள் அவர்கள் உயிருக்கே வைக்கும் வேட்டு.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப.
No comments:
Post a Comment