ரஷியாவில் பனிச்சரிவில் குட்டிக்கரடியொன்று தாயிடம் சேர மலையில்
பனிச்சரிவில் போராடி ஏறும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை
வெளியாகியுள்ளது.
கிழக்கு ரஷியாவில் பனிபடர்ந்து இருக்கும் மலையொன்றில் கரடியொன்று
அதனுடைய குட்டியுடன் போராடி ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “உங்களுடைய முதல் முயற்சியில்
வெற்றியடையவில்லை என்றால் என்ன தொடர்ந்து முயற்சியுங்கள் வெற்றி
கைக்கூடும்,” என்ற கூற்றை உறுதி செய்யும் வகையில் அதில் குட்டிக் கரடியின்
போராட்டம் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ ViralHog சேனலால் யூடியூப்பில்
வெளியாகியது. (தொடர்ச்சி கீழே...)
தாய் கரடியுடன் மலைச்சரிவில் பனிச்சரிவில்
குட்டிக்கரடி முயற்சி செய்கிறது. முதல் முயற்சியில் சிறிது தொலைவு
சென்றதும் குட்டிக்கரடி கீழே சரிந்து விழுந்து விடும். மறுபடியும் முயற்சி
செய்யும் இரண்டாவது முறை தாய் கரடி சென்ற பாதையை பின்பற்றி செல்லும்.
மலையின் உச்சியை அடையும் நிலையில் தாய் கரடி கோபமாக தட்டும். இதனால்
நொடியில் அதிர்ச்சியடையும் கரடி குட்டி தடுமாறி கீழே செல்லும். ஏற்கனவே
நின்ற இடத்தைவிட நீண்ட தொலைவு கீழே சென்று விடும். கீழே பாறைகள் நிறைந்த
பள்ளம் இருக்கும் நிலையில். குட்டி சாதுரியமாக கற்களை பிடித்து உயிர்
பிழைக்கும். மூன்றாவது முறையாக நீண்ட தொலைவு பனியில் ஏறி வெற்றியடையும்.
தாயுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும். இந்த வீடியோ
பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையவும் செய்தது. இந்த வீடியோ குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான செய்திகளுடன் வைரலாக பரவுவது பாராட்டக்கூறியது.
இதற்கிடையே
இதில் மறைந்துள்ள ஒரு வேதனையான உண்மை வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக
மலையின் உச்சியை குட்டி அடையும் போது தாய் கரடி ஆவேசமாக தட்டியது
என்னவென்று தெரிய வந்துள்ளது. வீடியோ ஆளில்லா சிறிய விமானம் மூலம்
எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை மிகவும் நெருக்கமாக காட்ட வேண்டும் என்று
விமானம் மிகவும் நெருக்கமாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த தாய்
கரடி, குட்டியை காப்பாற்ற அதனை தட்ட முயற்சி செய்துள்ளது. இதனால்
நிலைத்தடுமாறிய குட்டிக்கரடி மீண்டும் கீழே சென்றுள்ளது. இதனையடுத்து
விலங்குகள் மற்றும் சூழ்நிலை ஆர்வலர்கள் கண்டங்களை தெரிவித்துள்ளார்கள்.
இதுபோன்ற விமானங்கள் விலங்குகளின் உயிர்களுக்கு பெரிதும் எச்சரிக்கையாக
எழுந்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
உலகின் அனைத்து நாடுகளிலும் பெண்களுக்கு சமமாக அளிக்கப்படுவது மானபங்கமும், பாலியல் துன்புறுத்தலும் தான். கருப்போ, சிவப்போ, உயரமோ, கு...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே???? உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி...
-
மெரினா பீச்சில் மீட்கப்பட்ட பெண் யார் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக ...
-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் ...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்த...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
நான் வாழும் வாழ்க்கை வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள். மூன்று பிள்ளைகளில் நான் தான் இளையவள். நான் ஒரு அப்...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப..
No comments:
Post a Comment