9-ம் வகுப்பு மாணவியை கடத்தி கல்யாணம் பண்ணின கணக்கு வாத்தியாருக்கு
கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை தந்து உத்தரவு போட்டுள்ளது.
2016ம் ஆண்டு பண்ருட்டியில் நடைபெற்ற சம்பவம் இது. அப்போது அந்த மாணவி
அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில்
கணக்கு வாத்தியார்தான் ராஜீவ்காந்தி.
13 வயதே ஆன அந்த சிறுமியை 33 வயதான அதுவும் கல்யாணமான ராஜீவ்காந்தி
அடிக்கடி சந்தித்து பேசி வந்ததுடன், நிறைய உரிமை எடுத்து கேலி கிண்டலும்
செய்து வந்தார். ஒருநாள் காலை நோட்டு புத்தகம் வாங்க மாணவியை கடைக்கு
போனார்.
மிரட்டி கடத்தினார்
அப்போது பைக்கில் வந்த கணக்கு வாத்தியார், மாணவியை பார்த்து தன்னுடன்
பைக்கில் ஏறுமாறு கூறினார். அதற்கு சிறுமி மாட்டேன் என்று சொல்லவும்,
பைக்கில் வரவில்லை என்றால் தம்பி, தங்கைகளை கொலை பண்ணி விடுவேன் என்று
மிரட்டி பைக்கில் ஏற்றி கடத்தி சென்றார்.
பலமுறை பலாத்காரம்
இப்படியே பைக்கில் வாத்தியார் திருப்பதி வரை மாணவியை கொண்டு போய் விட்டார்.
அங்கு கோயிலில் வைத்து தாலியும் கட்டி விட்டு, அங்கேயே ஒரு ரூம் எடுத்து
பலமுறை மாணவியை பலாத்காரமும் செய்துள்ளார். திரும்பவும் அங்கிருந்து
பைக்கிலேயே ஒகேனக்கல் கூட்டி போய் அங்கியும் ரூம் எடுத்து மாணவியை
சீரழித்து உள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
பஸ் ஏற்றிவிட்ட ஆசிரியர்
இதனிடையே பெண்ணை காணோம் என்று பெற்றவர்கள் போலீசில் புகார் சொல்ல, மற்றொரு
பக்கம் வாத்தியாரையும் ஸ்கூலில் இல்லாமல் சந்தேகம் அதிகமாகிவிட்டது.
பிறகுதான் வாத்தியாரை போலீஸ் தேட போய், உஷாராகிவிட்ட அவர், மாணவியை மட்டும்
பஸ் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மகளிர் போலீசார்
பெற்றவர்களை பார்த்ததும் கதறி அழுதவாறே விஷயத்தை மாணவி சொல்ல, பல்வேறு
பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கை பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது
செய்தனர். அப்போதிருந்து இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. தற்போது, இது
சம்பந்தமாக மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு சொன்னார்.
ஆயுள் தண்டனை
அதில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்திக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சம்
ரூபாய் அபராதமும் விதித்தார். ஒருவேளை அபராத தொகையை வாத்தியார் கட்டத்
தவறினால், மேலும் 2 வருஷங்கள் சிறை தண்டனை என்றும் உத்தரவிட்டார்.
பைக்கிலேயே மாணவியை கடத்தி கடத்தி சீரழித்த கணக்கு வாத்தியாருக்கு ஒரு
வழியாக தண்டனை கிடைத்துள்ளதை பலர் வரவேற்றுள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
கால மாற்றத்தால் பல்வேறு நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம், என்றாலும் அதனால் ஏற்பட கூடிய விளைவைய...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட ப...
-
ஆஸ்திரேலியாவில் டிரைவர் இல்லாமல் 110 கிலோ மீட்டர் சென்ற ரயில் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரயில்...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
-
ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்கிறார்களாம். ரஜியின் இளைய மகள் சவுந்தர்யா தொழில் அதிபர் அஸ்வினை கடந்த 201...
No comments:
Post a Comment