வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சற்றுமுன் : இன்று 23 மாவட்டங்களுக்கு விடுமுறை ! 6 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 16, 2018

சற்றுமுன் : இன்று 23 மாவட்டங்களுக்கு விடுமுறை ! 6 பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!!



கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் சேதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதன் காரணமாக, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தேனி, பாண்டிச்சேரி, திண்டுக்கல், விழுப்புரம், சேலம், மதுரை, திருச்சி, காரைக்கால்,புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

திருப்பூர், ஈரோடு, விருதுநகர், கோவை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.


மேலும், இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் டிசம்பர் 17 ஆம் தேதியன்று நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment