உச்சநீதிமன்றம் 23. 10 .2018 ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்
பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்யவேண்டும் எனவும் வரும்
காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனும்
நிபந்தனைகளை விதித்தது.
பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது
குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில்
குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு வலியுறுத்த
வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே
பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் இந்த 2 மணி
நேரத்தை தமிழக அரசு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு
தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும் இரவில் 7
முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது. (தொடர்ச்சி கீழே...)
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இதனை
கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள்
கடைபிடிக்க வேண்டியவை என அரசு தெரிவித்துள்ளது:
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட
பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
2. உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில்
ஒன்றுகூடி கூட்டாக வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள்
மூலம் முயற்சிக்கலாம்.
இந்நிலையில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரத்தை மீறுபவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்யப்படும் எனவும், அதனையும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது 1000 ரூபாய் அபராதம் என தமிழக காவல்துறை அறிவிப்பு.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம...
-
படித்த பெண்ணாக இருந்தாலும், ஏன் டாக்டராகவே இருந்தாலும் கூட சாதிய வெறியில் சிக்காமல் தப்ப முடியாது போலும். ஆந்திராவில் அப்படி ஒரு
No comments:
Post a Comment