மஹிந்திரா நிறுவனம் இன்று ஜாவா பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில்
ட்ரியோ என்ற எலெக்ட்ரிக் ஆட்டோவையும் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்கள் மற்றும்
தலைநகர் பகுதிகளில் அதிக மாசு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும்
ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதனால் அந்த பகுதிகளில் மாற்று எரிசக்தி கொண்ட குறைவான அல்லது காற்று
மாசுவையே ஏற்படுத்தாத வகையிலான ஆட்டோக்களைதான் பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் அதிக அளவில் சிஎன்ஜி ரக ஆட்டோக்கள்
பயன்படுத்தப்படுகிறது. சென்னையிலும் இது போன்று பெட்ரோல் மற்றும் டீசல்
ஆட்டோக்களுக்கு தடையுள்ளது.
சிஎன்ஜி வாகனங்கள் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோக்களுக்கு
பதிலாக இயக்கப்பட்டாலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான எதிர்பார்ப்பு
தற்போது ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜிக்களை விட
குறைந்த செலவில் இயக்க முடியும். அதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல்ல லாபம்
கிடைக்கும். அத்துடன் மக்களுக்கு தற்போது உள்ள பணத்தை விட குறைவான பணமே
செலவாகும்.
ஏற்கனவே சில சிறிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை சந்தைக்கு
கொண்டு வந்து விட்டன. அவர்கள் கொண்டு வந்த எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் வட
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் பெரிய நிறுவனங்கள்
எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அதிகமாக களம் இறக்கவில்லை.
இதனால் மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த
எலெக்ட்ரிக் ஆட்டோ இரண்டு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. ட்ரியோ
மற்றும் ட்ரியோ யாரீ என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ட்ரியோ யாரீ என்பது 2+2 என்று 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய
வகையிலான ஷேர் ஆட்டோ வகையிலான சீட் அமைப்பை கொண்டுள்ளது. ட்ரியோ
வழக்கமான 3 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் ஐபி67 தொழிற்நுட்பம் என்று சொல்லக்கூடிய தூசு
மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரியில்
இயங்குகிறது. இதில், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு
பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் ட்ரியோ ஆட்டோ முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 3 மணி நேரம்
பிடிக்கும். இந்த ஆட்டோ முழு சார்ஜில் சுமார் 130 கி.மீ. வரை (ரியல்
வேல்டு) இயங்கும்.
ட்ரியோ யாரீ ஆட்டோவில் முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 2.30 மணி நேரம்
தேவைப்படும். இது முழு சார்ஜில் சுமார் 85 கிமீ வரை (ரியல் வேல்டு)
பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 30 என்எம் டார்க்கை
வெளிப்படுத்தும். இந்த ஆட்டோக்கள் அதிகபட்சமாக 45 கி.மீ. வேகம் வரை
செல்லும். தற்போது உள்ள சிஎன்ஜி ஆட்டோக்களில் 55-60 கி.மீ. வேகம்தான்
அதிகபட்ச வேகமாக உள்ளது.
இந்த ஆட்டோவை செயல்படுத்துவதற்கு சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.0.5
மட்டுமே செலவு ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சிஎன்ஜி ஆட்டோக்களை விட இதை
குறைந்த செலவில் இயக்க முடியும்.
மேலும் இந்த ஆட்டோக்கள் இரண்டு விதமான ரூஃப் ஆப்ஷன்களுடன் வருகிறது.
கடினமான ரூஃப் மற்றும் மெதுவான ரூஃப் என்று இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இது பொருத்தி தரப்படும்.
இந்த ஆட்டோக்கள் ரூ.2.22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த
ஆட்டோக்கள் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் ஆட்டோ கட்டணம் வெகுவாக
குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது ஆட்டோக்களில் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் சில
ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆட்டோ வந்துவிட்டால்
அவர்கள் வசூலிக்கும் தொகையில் இருந்து 10 சதவீதம் வசூலித்தாலே ஆட்டோ
ஓட்டுநர்கள் நன்றாக சம்பாதிக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வேலாமூர் ஊராட்சி, இராமாபுரம் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு [CCRN] மூலமா...
-
கடலூர், நாகை உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ - 120 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்ப...
-
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை ...
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் சாலை மிகவும் பழுதடைந்து உ...
-
";கடந்த 38 ஆண்டுகளில், நான் தங்களின் இல்லங்களில் பலமுறை சீர்செய்தும், மொய் எழுதியும் உள்ளேன். 1980 முதல் இன்றுவரை, என் குட...
-
நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலானத...
-
கஜா புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி...
-
அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானது. திருமணம் ஒருவரின் வாழ்க்கையை அழகாக மட்டும் மாற்றுவதில்லை, அர்த்தமுள...
-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாணவிகளுக்கு அனுப்பியது ஏன் என்று அருப்புக்கோட்டை உதவி பேராசிரியர...
-
தெலுங்கு பட விழா மேடையில் ஒளிப்பதிவாளர் ஒருவர் காஜலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போலீஸ் அதிக...
No comments:
Post a Comment