ஒரு மனிதனனுக்கு ஏழு பிறவி இருக்கிறது. இந்த ஏழு பிறவிகள் முடித்து
அவனது கர்மாவின் கணக்குப்படி அவன் சொர்க்கம் அல்லது நரகம் செல்கிறான் என
நாம் பல இடங்களில் படித்திருப்போம். பலர் கூறி கேட்டிருப்போம்.
"இந்த அறிவியல் யுகத்தில் இத்தெல்லாம் நம்பும்படியா இருக்கிறது?" என்ற
கேள்வியை தான் நாம் அனைவரும் எழுப்புவோம்.
ஆனால், இந்தியாவில் டெல்லியை சேர்ந்த சாந்தி என்ற பெண், மதுராவை சேர்ந்த
ஒரு பெண்ணின் மறுபிறவி என விசராணை அறிக்கையே அளிக்கப்பட்டுள்ளது. அதுவும்
அந்த காந்தி அமைத்து அனுப்பிய விசாரணை குழுவால்..
யார் இந்த சாந்தி?
சாந்தி டெல்லியை சேர்ந்த பெண். 11.11.1926 அன்று பிறந்தவர். நான்கு வயது
வரை இயல்பாக எல்லா குழந்தைகளை போல விளையாடிக் கொண்டிருந்தார் சாந்தி.
ஆனால், அதற்கு பிறகு தான் அவரது வாழ்வில் ஒரு புயல் வீசியது.
(தொடர்ச்சி கீழே...)
மதுராவை சேர்ந்தவள் நான்...
சாந்தி தனது நான்காம் வயதில் திடீரென ஒரு நாள், தனது சொந்த வீடு மதுராவில்
இருக்கிறது. நான் மதுராவை சேர்ந்தவள் என கூறி பெற்றோரை
அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதை ஆரம்பத்தில் பெற்றோர்கள் அதட்டி, இப்படி
பேச வேண்டாம் என கூறி சாந்தியை கண்டித்தனர்.
கணவர் பெயர் கேதார்நாத்...
ஒருமுறை சாந்தி அவரது பள்ளி ஆசிரியர்களிடம், தனது கணவர் பெயர் கேதார்நாத்,
எனது பெயர் லுக்கி தேவி என்றும் கூறினார். இப்படி ஒவ்வொரு தகவலாக கூறி
தன்னை சுற்றி இருந்தவர்களை திகைக்க வைத்தார் சாந்தி.
9 ஆண்டுகளுக்கு முன் மரணம்...
எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தனது மகன் பிறந்த
பத்தாவது நாளில் தான் மரணம் அடைந்துவிட்டதாக கூறி பேரதிர்ச்சியை அளித்தார்
சாந்தி.
விசாரணை....
சாந்தி இப்படி ஒவ்வொரு தகவலையும் நேர்த்தியாக, நடந்தப்படியே கூறுவதை வைத்து
விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் குழந்தை சாந்தி கூறியது
அனைத்தும் உண்மை. அப்படிப்பட்ட சம்பவங்கள் மதுராவில் நடந்தது
கண்டறியப்பட்டது.
காந்தியின் பார்வைக்கு சென்றது...
சாந்தி பற்றிய எல்லா விவரங்களும் காந்தியின் கவனத்திற்கு சென்றது. காந்தி,
சாந்தி பற்றி முழுமையாக விசாரிக்க குழு ஒன்றையும் அமைத்தார். விசாரணை
குழுவோடு சாந்தி, அவரது பெற்றோர் மதுரா சென்றனர்.
அடையாளம் காட்டிய சாந்தி....
மதுராவிற்கு சென்று அனைத்தையும் அடையாளம் காட்டினார் சாந்தி. விசாரணையின்
முடிவில் சாந்தி கூறிய அனைத்தும் உண்மை தான் என்றும், சாந்தி லுக்கி
தேவியின் மறுபிறவி தான் என்றும் அறிக்கை அளித்தது விசாரணை குழு.
திருமணம் செய்துக் கொள்ளவில்லை...
தனது வாழ்நாள் முழுவதும் சாந்தி தேவி திருமணம் செய்துக் கொள்ள வில்லை.
இயான் ஸ்டீவன் முதல் மறுபிறவி பற்றி ஆய்வு செய்து வந்த பலர் சாந்தியை
குறித்து ஆராய்ச்சி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
மனைவியை கூட்டி வர கிளம்பிய கணவர் தற்கொலை! கொடைக்கானல்: கோபித்து கொண்டு தன் அம்மா வீட்டுக்கு போன பொண்டாட்டியை மீண்டும் கூட்டி வருவ...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத.
No comments:
Post a Comment