வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருச்சி மாணவிகளின் வெடியில்லா தீபாவளி அணிவகுப்பு... 3 ஆயிரம் பேரின் அசத்தல் முயற்சி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

திருச்சி மாணவிகளின் வெடியில்லா தீபாவளி அணிவகுப்பு... 3 ஆயிரம் பேரின் அசத்தல் முயற்சி!



மாசில்லாத தீபாவளியை கொண்டாடும் விதமாக திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3 ஆயிரம் மாணவிகள் பட்டாசு மற்றும் பூச்சட்டி வடிவில் நின்ற காட்சி காண்பதற்கு பிரமிப்பாக இருந்தது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான்.
 

 சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதிலும், மத்தாப்பு கொளுத்துவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்த பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வெடிப்பதற்கும் சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்து உள்ளது. குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக மாசற்ற தீபாவளியை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்ற பிரசாரமும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று யுகா பெண்கள் அமைப்பின் சார்பில் வெடியில்லா தீபாவளி என்ற பெயரில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
 
 சமூக ஆர்வலர் அல்லி ராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பள்ளி மாணவிகள் பள்ளி மைதானத்தில் சில வகையான பட்டாசுகள் மற்றும் பூச்சட்டி வடிவில் இணைந்து நின்றனர். திருச்சி மாநகர போலீஸ் துணை ஆணையர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாசற்ற தீபாவளி கொண்டாட மாணவ சமுதாயம் முன்வரவேண்டும் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்படவேண்டும் என்பதற்காக செடிகளும் பரிசாக வழங்கப்பட்டன.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment