வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ரூ.2/- ரெண்டு ரூபாய்க்கு புரோட்டா!- இப்படியும் மனிதர்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 20, 2018

ரூ.2/- ரெண்டு ரூபாய்க்கு புரோட்டா!- இப்படியும் மனிதர்கள்



நாகர்கோவில் நகரின் மையப்பகுதியான வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் அந்த புரோட்டா கடை. விலைவாசி விண்ணில் பறக்கும் இன்றைய சூழலிலும் இங்கே ஒரு புரோட்டா இரண்டே ரூபாய்தான்!


நாம் சென்றிருந்த நேரத்தில், பாலகிருஷ்ணன் புரோட்டா போட்டுக் கொண்டிருக்க, அவரது மனைவி லெட்சுமி, சாப்பிட வந்தவர்களுக்கு பரிமாறிக்கொண்டிருந்தார். பள்ளிக்கூடம் முடிந்து செல்லும் பொடிசுகளும், டியூஷனுக்குப் போகும் முன்பு இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
இங்கே சப்பாத்தியும், தோசையும்கூட உண்டு. ஆனால், அவையெல்லாம் 5 ரூபாய்! புரோட்டா மட்டுமே இரண்டு ரூபாய். அது ஏன் என்ற கேள்வியோடு பேசத் துவங்கினேன். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!


 “முதல்ல சாப்பிடுங்க தம்பி” என்று சொல்லிவிட்டு பேசத் துவங்கிய பாலகிருஷ்ணன், “இந்தக் கடை ஆரம்பிச்சு 27 வருசம் ஆச்சு. நான் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன். அவரு படங்களைப் பார்த்துதான் எனக்கும் ஏதாவது சேவை செய்யணும்னு ஆசை. அப்படித்தான் இந்த ஹோட்டலை தொடங்குனேன். ஆரம்பத்தில் ஒரு புரோட்டா 25 காசுக்குப் போட்டேன். அப்புறம் 50 காசு, தொடர்ந்து 1 ரூபாய், அதுக்கு அப்புறம் 1.50க்குக் கூட போட்டோம். இப்போ 2 ரூபாய் ஆக்கி ஆறு வருசமாச்சு.


ஜெயலலிதா எல்லா ஊர்லயும் அம்மா உணவகம் தொடங்கி ஏழைங்க பசியைப் போக்குனாங்க. எங்க கடையோட பேரும் ‘அம்மா
புரோட்டா ஸ்டால்’ தான். தினமும் நானும், வீட்டம்மாவும் மத்தியானம் கடைக்கு வந்துடுவோம். ராத்திரி பத்து மணி வரை கடை திறந்திருக்கும். நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது புரோட்டான்னா எனக்கு உசுரு. ஆனா, வாங்கிக் கொடுக்க வீட்டுல வசதியில்லை. பலநாள் ஏக்கத்தோடே படுத்துருக்கேன். அப்படி இந்த ஏரியால எந்தப் பிள்ளையும் ஏங்கிறக் கூடாதுன்னுதான் இன்னும் இரண்டே ரூபாய்க்கு புரோட்டாவைக் கொடுக்கிறேன். எங்க ரெண்டு பேருக்கும் இந்த வருமானம்தான் தம்பி” என்றார்.


அவரது மனைவி லெட்சுமியின் குரல் மெல்ல எழும்புகிறது. “எங்களுக்கு பிள்ளைகள் கிடையாது. நாங்க ரெண்டு பேரும் வாடகை வீட்டுலதான் இருக்கோம். வேற கடைகளில் சம்பளத்துக்குப் போய் நின்னா, நாலு நாள் லீவு போட்டா வேலையை விட்டு நிப்பாட்டிடுவாங்க. அதுவே நாங்களே இப்படிக் கடை நடத்தும் போது தேகத்துக்கு கலியலைண்ணா (உடம்புக்கு சுகமில்லைன்னா) லீவு விட்டுருவோம். இதுபோக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கடை லீவு.
இனி விலைவாசி எவ்வளவு கூடுனாலும் எங்க ஆயுசுக்கும் இரண்டு ரூபாய்க்கு மேலபுரோட்டா விலையை கூட்டக் கூடாதுன்னு முடிவெடுத்திருக்கோம். நோய், நொடி இல்லாம வாழ்றதை விட வேற என்ன சொத்தைச் சேர்த்து வச்சுட முடியும்? வயிறார சாப்பிட்டுட்டு நாலு பேரு வாயார வாழ்த்திட்டுப் போற சந்தோசம் இதுலகிடைக்குது. அந்த வாழ்த்தும், நிறைவும் தான் எங்க சம்பாத்யம்” என்றார் லெட்சுமி!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment