தந்தை இறந்ததால் வாழ்க்கையில் வெறுமை ஏற்பட்டதாகவும், 25-வது வயது வரை
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
தனது சுயசரிதையில் குறிப்பிட்டு உள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ எனும் பெயரில் கிருஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் தனக்கும் தற்கொலை எண்ணம் இருந்ததாக அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
அவர் கூறியிருப்பதாவது:-
எனது இளமை கால வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருந்தது. எனது 9-வது வயதில் தந்தை இறந்ததும் வாழ்க்கை வெறுமை ஆனது. இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுத்து, அதில் வரும் வருமானத்தில்தான் வாழ்க்கையை நகர்த்தினோம். இதனால் எனது 25-வது வயது வரை எனக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தது. ஆனால் அதுவே எனக்கு மிகுந்த தைரியத்தையும் கொடுத்தது. ஏனெனில் மரணம் என்பது அனைவருக்கும் நிரந்தரம். ஒவ்வொருவருக்கும் காலாவதி நாள் குறிக்கப்பட்டு இருக்கும் போது நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்ற உறுதி ஏற்பட்டது.
‘ரோஜா’ படத்துக்கு இசையமைக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பது வரை விரக்தியாகவே இருந்தேன். அதற்கு முன்பாகவே நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். எனது நிஜ பெயரான திலீப்குமார் என்பதை, ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றினேன். திலீப்குமார் பெயர் எனக்கு பிடிக்காமல் போனது. அந்த பெயரையே வெறுத்தேன். அது ஏன்? என்று புரியவில்லை. பெயரை மாற்றிய பிறகு புது மனிதனாக மாற நினைத்தேன். முழுமையாக என்னை மாற்றினேன். பழைய விஷயங்களில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்.
அமைதியான சூழ்நிலை எனக்கு பிடிக்கிறது. இரவு நேரத்தில் தான் அது கிடைக்கிறது. அதனாலேயே இசையமைக்கும் பணியை இரவு நேரங்களில் மேற்கொள்கிறேன். சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். அதில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியாவிட்டாலும், நல்ல தந்தையாக இருக்க விரும்புகிறேன். இவ்வாறு சுயசரிதையில் அவர் கூறியுள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
பொதுவாகவே பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை ஒரு தீட்டை போலவும் அதை குறை சொல்லியும் தான் சமூகத்தில் பேசப்படும். அதேசமயம் ஆண்கள் இதைப்பற்...
-
1997 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் சூரிய வம்சம். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் இன்றுவரை பலர...
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த...
-
புதுச்சேரியில் உள்ள அணைத்து குடும்ப அட்டை ஒவ்வொன்றுக்கும் 1000 ரூபாய் தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அதிரடியா...
-
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அற...
-
வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்....
-
எந்த ஒரு தாய்க்கும் நேரிட கூடாத ஒரு கொடுமையான சம்பவம் இது. எதிரியும், பகை உணர்வு கொண்டவர்களும் கூட இப்படி ஒரு சாபத்தை யாருக்கும் ...
-
தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது எதனால் என்று நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிவக்க...
-
காலை நேரத்தில் எழுந்து கொள்வது மிக கடினமான ஒன்றாக இன்றும் பலரால் கருதப்படுகிறது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் பல வித விளைவுக...
-
இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயர்ந்த சிலையை பிரதமர் ம.
No comments:
Post a Comment