ட்ரம்ப் நிலைமை இப்போது இப்படியா ஆகணும்? 18 வயசு மாணவியிடம் ட்வீட்
மூலம் பல்ப் வாங்கி உள்ளார் அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவில் இப்போது உறைபனி காலம்.
நாடெல்லாம் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் வாகனங்கள், கால்நடைகள் என எல்லாமே பனியால் கஷ்டப்பட்டு கிடக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட 1600 விமானங்களே ரத்தும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில், பனிப்பொழிவை நினைத்து அதிக கவலைப்பட்ட ட்ரம்ப் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
பனிப்பொழிவு
அதில், "புவி வெப்பமயமாதலால், புவியில் நிகழ்ந்ததுதான் என்ன? முந்தைய
வரலாறுகளை தோற்கடிக்கும் அளவுக்கு இம்முறை இவ்வளவு பனிப்பொழிவு
இருக்கிறதே?" என்று பதிவிட்டார்.
54 வயசு சின்னவள்
அதிபர் ட்ரம்ப்பின் இந்த பதிவிற்கு, 18 வயது பெண் பதிலடி தந்துள்ளார். அந்த
பெண் நம் நாடுதான். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்தா சர்மா. தனது
ட்வீட்டில் அந்த பெண், "உங்களை விட 54 வயது சின்னவள் நான். இப்பதான்
உயர்நிலைக் கல்வியை முடித்திருந்தாலும், எனக்கு தெரிந்தவரை பருவகாலநிலையும்
சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல. இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
உங்களுக்கு அனுப்புகிறேன்
வேண்டுமென்றால், நான் படிக்கும் என்சைக்ளோபீடியாவை உங்களுக்கு அனுப்பி
வைக்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்றால் அந்த புக் படிச்சு
தெரிஞ்சுக்கலாம். அந்த புக்கில் இது பத்தின விஷயம் சரியாக
சொல்லப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த மாணவியின் இந்த
ட்வீட்தான் தற்போது வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் எல்லாம் இந்த ட்வீட்டை
லைக் செய்து விட்டு போகிறார்கள்.
கேலி கிண்டல்
மாணவியின் தைரியத்தை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலர்
பருவநிலை மாற்றம் சம்பந்தமாக மாணவி ஆய்வு படிக்க விரும்பினால்கூட அதற்காக
தாங்கள் உதவ தயார் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சமயத்துல
அமெரிக்காவில் பனி பொழியும் என்று உலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்தக்கு ட்வீட்
போட்டு இப்போ சின்ன பிள்ளைகளிடம்கூட கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்
ட்ரம்ப்!!
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
No comments:
Post a Comment