வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஹேப்பி நியூஸ்.. சாந்திக்கு 12வது குழந்தை பிறந்திருச்சு.. வீட்டுலதான்.. சுகப்பிரசவம்தான்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

ஹேப்பி நியூஸ்.. சாந்திக்கு 12வது குழந்தை பிறந்திருச்சு.. வீட்டுலதான்.. சுகப்பிரசவம்தான்!



ஒரு ஹேப்பி நியூஸ்!! சாந்திக்கு குழந்தை பிறந்திடுச்சாம்... எந்த சாந்தி தெரியுமா? ஆஸ்பத்திரி பக்கமே பிரசவத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நர்சுகளை எல்லாம் அலற விட்டு ஓட விட்டாரே... அந்த சாந்திக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது!! முசிறியை சேர்ந்த காதல் ஜோடிதான் கண்ணன்-சாந்தி. கண்ணனுக்கு 47 வயது, சாந்திக்கு 45 வயது. 20 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சு. இவங்களுக்கு 11 குழந்தைகள். இதில் 3 மகள்களுக்கு கல்யாணம் ஆகி சாந்தியும் - கண்ணனும் தாத்தா, பாட்டி ஆகிவிட்டார்கள்.

ஆனாலும் சாந்தி 12-வதாக கர்ப்பம் ஆனார். இந்த விஷயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியவர, பிறகு தாய், சேய் நல அலுவலரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களும் சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வர அவரது வீட்டுக்கு போனார்கள். ஆனால் சாந்தி எஸ்கேப்!! நர்சுகள் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதை பார்த்த சாந்தி, காவிரி ஆற்றங்கரை பக்கம் அவசர அவசரமாக கிளம்பி போய் மறைந்து கொண்டார்.

கண்ணில் சிக்கவில்லை 
இதற்கு காரணம், 11 குழந்தைகளையும் சாந்தி வீட்டில்தான் பெற்றெடுத்தாராம். ஆஸ்பத்திரி பக்கமே போனதில்லையாம். பிரசவ நேரத்தில் மிஸ்டர் கண்ணன் உதவி செய்வாராம். 12-வது குழந்தையையும் வீட்டில்தான் பெற்றெடுப்பேன் என்பதுதான் சாந்தியின் பிடிவாதம். இப்போது மெடிக்கல் ஆபீசர்கள் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்விடுவார்கள் என்று பயந்துதான் சாந்தி அவர்களின் கண்ணில் சிக்காமல் கிளம்பினார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அக்கப்போர் செய்த சாந்தி 
ஆனால் எல்லோரும் சேர்ந்து சாந்தியை ஆற்றங்கரை பக்கம் கண்டுபிடித்து விட்டார்கள். சாந்தியை ஆஸ்பத்திரிக்கு நர்சுகள் அழைக்க, மாட்டவே மாட்டேன் என்று சாந்தி பிடிவாதம் பிடிக்க.. ஒரே அக்கப்போர் ஆகிவிட்டது. ஒருவழியாக ஆஸ்பத்திரிக்கு சாந்தியை அழைத்து கொண்டு போய் கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள்.


சுகப்பிரசவம் 
செக்-அப் செய்த டாக்டர்கள் சாந்திக்கு ரத்தசோகை இருப்பதாக சொன்னார்கள். பிறகு அதற்கான சிகிச்சையும் நடந்தது. இதன்பிறகு, பிரசவத்துக்கு மருத்துவமனை வருமாறு ஆஸ்பத்திரியில் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் தற்போது சாந்திக்கு குழந்தை பிறந்துவிட்டது. அழகான பெண் குழந்தை பிறந்தது. விசேஷம் என்னவென்றால், அவ்வளவு சொல்லியும் இந்த 12-வது குழந்தையையும் வீட்டில்தான் பெற்றெடுத்தார் சாந்தி. அதுவும் சுகப்பிரசவம்!!

கண்டிப்பா கு.க.???
 இதன்பிறகுதான் சாந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்படுகிறது. குழந்தை பிறந்ததை பற்றி சாந்தியிடம் கேட்டால், "நானே வழக்கம்போல் பிரசவத்தை பார்த்துக் கொண்டேன்... உதவிக்கு என் புருஷன் இருந்தார்" என்றும் கூறியுள்ளார். எப்படியோ, கண்டிப்பாக ஆஸ்பத்திரியில சாந்திக்கு கு.க. பண்ணிதான் அனுப்புவாங்க போல!!

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment